Don't Miss!
- News
அடிதூள்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட செம அறிவிப்பு.. களமிறங்கிய சர்வதேச "டீம்".. சென்னைக்கு குட்நியூஸ்
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Lifestyle
கலோரிகள் குறைவாக உள்ள இந்த 7 உணவுகள சாப்பிட்டா... உங்க எடை டக்குனு குறைஞ்சிடுமாம்...!
- Technology
Instagram-ல் மெசேஜ் Unsend செய்தால் மீண்டும் பார்க்க முடியுமா? போட்டோ கூட ரிட்டன் வருமா?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ஜெர்ரி சார்தான் வேணும்.. அடம்பிடிக்கும் மாணவிகள்.. கனா காணும் காலங்கள் தொடரில் அட்ராசிட்டி!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடராக 5 சீசன்களை கடந்த தொடர் கனா காணும் காலங்கள்.
பார்வையாளர்களை தங்களின் பள்ளிக் காலங்களுக்கு கடத்திய இந்தத் தொடரின் வரவேற்பு அடுத்தடுத்த சீசன்களை தந்தது.
இந்நிலையில் தற்போது இந்தத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
ப்பா..
டைட்
டாப்ஸில்
டிரெண்டிங்கை
தெறிக்கவிடும்
ஷிவானி
நாராயணன்..
கண்டபடி
வர்ணிக்கும்
ரசிகர்கள்!

கனா காணும் காலங்கள் தொடர்
விஜய் டிவியில் கடந்த 2000ம் ஆண்டில்தான் தன்னுடைய பயணத்தை துவங்கியது கனா காணும் காலங்கள் தொடர். பலரும் கனவுகளை காணும் காலம் மற்றும் துரத்தும் காலம் பள்ளிக் காலம்தான் என்பதை மையமாக கொண்டு இந்தத் தொடர் வெளியானது. இந்தத் தொடர் பல சாதனைகளை படைத்தது.

ட்ரெண்ட் செட்டரான தொடர்
ஒரு தொடர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் ரசிகர்களை கவர வேண்டும் என்பதை இந்தத் தொடர் சுட்டிக் காட்டியது. இந்தத் தொடரில் நடித்த நடிகர்கள் பலர், தொடர்ந்து திரைத்துறையிலும், தொலைக்காட்சியிலும் பல வாய்ப்புகளை பெற இந்தத் தொடர் காரணமாக அமைந்தது.

வாய்ப்புகளை திறந்துவிட்ட தொடர்
இந்தத் தொடர்மூலம் தான் தற்போது அனைவருக்கும் பிடித்தமானவராக பிக்பாஸ் டைட்டில் வின்னராக மாறியுள்ளார் நடிகர் ராஜு. தான் கல்லூரியில் போய் படித்ததைக் காட்டிலும் இந்தத் தொடரில் நடித்த ஞாபகங்களே அதிகமாக காணப்படுவதாக அவர் முன்னதாக தெரிவித்துள்ளார். கனா காணும் தன்னைப் போன்ற பலருக்கு இந்தத் தொடர் சிறப்பான களத்தை அமைத்துக் கொடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

கனா காணும் காலங்கள் வெப் தொடர்
மேலும் இந்தத் தொடர் மூலம் பிரபலமான நடிகர் பால சரவணன், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதேபோல நடிகர் ரியோ ராஜ், விஷ்ணு போன்றவர்களுக்கும் இந்தத் தொடர் சிறப்பான வெளிச்சத்தை கொடுத்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் முதல் இந்தத் தொடர் வெப் தொடராக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிரப்பாகி வருகிறது.
|
சிறப்பான ப்ரமோக்கள்
தற்போது ரசிகர்களை வெப் சீரிஸ் மூலமும் கவர்ந்துவரும் இந்த தொடரின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மாணவர்களுக்கு பிடித்தமான ஆசிரியர்களாக ஜெர்ரி, மலர் காணப்படுகின்றனர். இதனிடையே தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் ஜெர்ரி சார் குறித்து பேசும் மாணவிகள், அவரே எல்லா பாடங்களையும் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று பேசுவதாக அமைந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்
இதுவே மாணவிகளுக்கே உரிய குறும்புடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த தொடரின் பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இந்தத் தொடர் தன்னுடைய பள்ளி நாட்களை நினைவுப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாமே ஜாலிதான் பாடல்
எல்லாமே ஜாலி தான் என்ற இந்த இசை ஆல்பம் சிறப்பான வகையில் காணப்படுகிறது. இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களை கண்டிப்பாக பள்ளி நாட்களுக்கு அழைத்து செல்லும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மாணவர்களின் சேட்டைகள் உள்ளிட்டவை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.