இரண்டு நாள்களில் பெரிய சர்ப்ரைஸ்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பத்து தல படக்குழு

சென்னை: மூன்றாம் தேதி பெரிய சர்ப்ரைஸ் இருப்பதாக பத்து தல படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல முகங்களை கொண்ட நடிகர் சிம்பு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம், சுசீந்திரனின் ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் பழைய சிம்பு மிஸ்ஸிங் என்றே ரசிகர்கள் கூறினர்.

மாநாடு மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு

மாநாடு மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு

இந்தச் சூழலில்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். மாநாடு படம் வெளியானதும் அனைவரும் சிம்புவின் நடிப்பையும், எனர்ஜியையும் பார்த்து வாய் பிளந்தனர். படமும் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. கம்பேக்னா இப்படித்தான் இருக்கணும் என சிம்பு ரசிகர்கள் கொண்டாடினார். மாநாடு படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் சிம்பு.

மீண்டும் இணைந்த எவர்க்ரீன் கூட்டணி

மீண்டும் இணைந்த எவர்க்ரீன் கூட்டணி

அடுத்ததாக விண்ணைத்தாண்டி வருவாயா என்ற க்ளாசிக் படத்தை கொடுத்த கௌதம் வாசுதேவுடன் இணைந்தார் சிம்பு. ஜெயமோகன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவானது வெந்து தணிந்தது காடு. இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக சிம்புவின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டித் தள்ளினர். இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே பத்து தல படத்திலும் கமிட்டானார் சிம்பு.

கன்னட படத்தின் ரீமேக்காக பத்து தல

கன்னட படத்தின் ரீமேக்காக பத்து தல

பத்து தல படமானது கன்னட படமான முஃப்தி படத்தின் ரீமேக்காக உருவாகிறது. சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி தொட்டி ஜெயா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களுக்கு பிறகு பத்து தலயில் சிம்பு கேங்ஸ்டராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பத்து தல அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

பத்து தல அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

இந்நிலையில் பத்து தல படம் குறித்த அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அந்த நிறுவனம், "மார்ச் மூன்றாம் தேதி மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளது. இந்த சர்ப்ரைஸானது படத்தின் டீசராகவோ, ட்ரெய்லராகவோ அல்லது ப்ரோமோவாகக்கூட இருக்கலாம்; இல்லை அதுகுறித்த அறிவிப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X