கமல் vs ஞானவேல்ராஜா.. கோலிவுட்டில் நடக்கும் புதிய சண்டை.. என்ன பிரச்சனை? யார் மீது தவறு!

நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி புகார் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் கமல்ஹாசன் மீது பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பண மோசடி புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 1 படம் வெளியான சமயத்தில் கடும் பண நெருக்கடியில் இருந்தார். பெரும் அளவு கடன் வாங்கித்தான் அவர் அந்த படத்தை வெளியிட்டார்.

அதேபோல் உத்தம வில்லன் படம் வெளியான போது நடிகர் கமல்ஹாசன் கடனில் மூழ்கினார். சிலரிடம் கடன் வாங்கிதான் அவர் அந்த படத்தை வெளியிட்டார்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் உத்தம வில்லன் படம் அவர் நினைத்த அளவிற்கு செல்லவில்லை. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சேர்த்து வெளியிட்டது. இரண்டு பேருக்கும் இதனால் நஷ்டம் ஏற்பட்டது.

முறைகேடு

முறைகேடு

இந்த படத்தை வெளியிடுவதற்காக அந்த நேரத்தில் கமல்ஹாசன் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிடம் கடன் வாங்கி இருந்தார். 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்த காரணத்தால் கமல்ஹாசன் நினைத்த வருமானம் அவருக்கு கிடைக்கவில்லை.

என்ன வாக்கு

என்ன வாக்கு

இந்த நிலையில் தான் வாங்கிய கடனுக்கு பதிலாக கமல்ஹாசன் படம் நடித்து கொடுப்பதாகவும் அல்லது கடனை சில மாதங்கள் கழித்து வட்டியுடன் கொடுப்பதாகவும் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவிடம் கமல்ஹாசன் கூறியுள்ளார். இதை கேட்டு இத்தனை வருடங்கள் அவர் எதுவும் குறிப்பிடாமல் இருந்துள்ளார். ஆனால் கமல்ஹாசன் அதன்பின் ஞானவேல் ராஜாவிடம் படம் நடித்து கொடுக்கவில்லை.

மோசடி

மோசடி

இதனால் கமல்ஹாசன் தான் வாக்களித்தபடி பணமும் கொடுக்கவில்லை , படமும் நடித்து கொடுக்கவில்லை என்று ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக மோசடி புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் சிக்கல்

ஆனால் சிக்கல்

ஆனால் இதற்கு பின் வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று சில தயாரிப்பாளர் தரப்பில் கூறுகிறார்கள். கமல்ஹாசன் மீது இருக்கும் வெறுப்பில் சிலர் இப்படி செய்கிறார்கள். அவரிடம் நேரடியாக பணம் கேட்டால் கொடுத்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர்.

அரசியல் அழுத்தம்

அரசியல் அழுத்தம்

இது மட்டுமின்றி இது அரசியல் ரீதியான அழுத்தம். இதற்கு பின் வேறு யாராவது இருக்கலாம் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க உள்ளது என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X