»   »  மீண்டும் 'சூது கவ்வும்' நலன் குமாரசாமியுடன் கைகோர்த்த விஜய் சேதுபதி

மீண்டும் 'சூது கவ்வும்' நலன் குமாரசாமியுடன் கைகோர்த்த விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சீவீ குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனும் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கின்றனர்.

Studio Green joins with Thirukkumaran Entertainment

இந்தப் படத்துக்கு புரொடக்ஷன் நெ 14 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.

Studio Green joins with Thirukkumaran Entertainment

சூது கவ்வும் வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார்.

Studio Green joins with Thirukkumaran Entertainment

விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

Studio Green joins with Thirukkumaran Entertainment

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Studio Green joins with Thirukkumaran Entertainment

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.

English summary
CV Kumar and Gnanavel Raja join hands for a new project directed by Nalan Kumarasamy with Vijay Sethupathy in lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil