கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் தான்.. சூர்யா அண்ணா செஞ்சத மறக்கவே மாட்டேன்.. ஞானவேல் ராஜா ஓபன் டாக்!

சென்னை: சுமார் 350 யூடியூபர்கள் நான் காலியாகிட்டேன், கடனில் தத்தளிக்கிறேன் என்றெல்லாம் இஷ்டத்துக்கு பேசினார்கள். ஆனால், இன்னைக்கு தமிழ் சினிமாவில் கடனே இல்லாத தயாரிப்பாளர்னா அது நான் தான் என 'வா வாத்தியார்' பட பிரஸ்மீட்டில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூர்யாவை வைத்து கங்குவா படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா அந்த படத்தால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் என பலரும் கூறினர். 300 கோடி பட்ஜெட்டில் உருவான படம் அதிகபட்சமாக 107 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததாக வெளியான தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Studio Green Producer Gnanavel Raja emotional talks at Vaa Vaathiyaar press meet

அந்த படத்தின் தோல்வி காரணமாக வைப்பதாக சொன்ன சக்சஸ் மீட் கூட வைக்கவில்லை. மேலும், கார்த்தியை வைத்து ஞானவேல் ராஜா தயாரித்த வா வாத்தியார் திரைப்படமும் நீதிமன்ற வழக்கில் சிக்கி கடந்த ஆண்டு வெளியாகாமல் இருந்த நிலையில், பொங்கல் வெளியீடாக நாளை ரிலீஸ் ஆகிறது.

கடனே இல்லாத தயாரிப்பாளர்: தமிழ் சினிமாவில் இப்போதைக்கு கடனே இல்லாத தயாரிப்பாளர்னா அது நான் தான் என வா வாத்தியார் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ளார். மேலும், தான் காலியாகி விட்டதாக சுமார் 350 யூடியூபர்கள் வித விதமாக வீடியோக்களை வெளியிட்டு ஏகப்பட்ட கதைகளை கூறினர். ஆனால், நான் எங்கேயும் ஓடிவிடவில்லை. இங்கே தான் இருக்கிறேன் என்றும் கம்பீரமாக பேசினார்.

Studio Green Producer Gnanavel Raja emotional talks at Vaa Vaathiyaar press meet

சூர்யா அண்ணன் விட்டு ஓடல: சிலர் அண்ணா அண்ணான்னு சொல்வாங்க, சிலர் தம்பின்னு சொல்வாங்க, அப்படியே நடுரோட்டில் விட்டுட்டு ஓடிருவாங்க. ஆனால், சூர்யா அண்ணா அப்படி விடல, உனக்கு என்ன தான்யா பிரச்னை எனக் கேட்டார். என் பிரச்னைகளை சரி செய்து நான் இங்கே நிக்கிறேன்னா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் சூர்யா அண்ணா தான். அவருக்கு இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன் என்று எமோஷனலாகி விட்டார் ஞானவேல் ராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X