ஹேப்பி பர்த்டே சிம்பு.. டிரெண்டாகும் #PathuThala.. வைரலாகும் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ!
சென்னை: நடிகர், பாடகர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடனக் கலைஞர் இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்ட சிம்புவின் 38வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சிலம்பரசன் எனும் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட பிறந்தநாள் ஹாஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
சிம்புவின் பத்து தல படத்தை தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் #PathuThala என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் பிறந்தநாள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

38வது பிறந்தநாள்
1983ம் ஆண்டும் பிப்ரவரி 3ம் தேதி இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் மற்றும் உஷா தம்பதியினருக்கு மூத்த மகனாக பிறந்தவர் சிம்பு. இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். திரை பிரபலங்களும், ரசிகர்களும் என பலரும் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஸ்பெஷல் வீடியோ
நடிகர் சிம்புவின் அடுத்த படமான பத்து தல படத்தை தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், #PathuThala என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் பிறந்தநாள் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்கள் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தயாரிப்பாளர்களுக்காக படம்
சிம்பு தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அந்த படத்தின் மூலம் வரும் பணத்தை நலிவடைந்த தயாரிப்பாளர்களின் குடும்பத்திற்காக கொடுக்க முன் வந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏகப்பட்ட சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

மாநாடு டீசர்
தனது பிறந்தநாள் அன்று யாரும் வீட்டுக்கு வெளியே வந்து காத்து நிற்க வேண்டாம் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட சிம்பு, தான் பட ஷூட்டிங்கில் பிசியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், ரசிகர்களுக்காக இன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தின் டீசர் பிற்பகலில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











