சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது!
சந்தானம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வெளியிடுகிறது.
தெலுங்கில் வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் தமிழ் வடிவம்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்தப் படத்தை சந்தானமும் பிவிபி சினிமாவும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
படத்தின் டீசருக்கு ஆன்லைனில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்த 'டாக்' நன்றாக இருப்பதால், இதனை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கேட்டுப் பெற்றுள்ளது ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்.
இந்த உரிமையைப் பெற மிகப் பெரிய தொகையைத் தந்துள்ளது ஸ்டுடியோ கிரீன்.
காமெடி நடிகர் ஸ்ரீநாத் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் மே 10-ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. கோச்சடையான் தள்ளிப் போனதால் இந்த திடீர் முடிவாம்!
Comments
studio green santhanam vallavanukku pullum aayutham ஸ்டுடியோ கிரீன் சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்


Click it and Unblock the Notifications
