சிம்பு 45 படத்தை தயாரிக்கும் ஞானவேல்ராஜா: சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு

By Siva

சென்னை: சிம்புவின் 45வது படம் குறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக உடல் எடையை குறைக்க அவர் லண்டன் சென்றார். இந்நிலையில் அவரின் 45வது படத்தை நார்தன் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த படத்தில் கவுதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஸ்டுடியோ கிரின்

நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்து ஸ்டுடியோ கிரீன் ட்வீட் செய்துள்ளது.

கவுதம் கார்த்திக்

சிம்புவுடன் சேர்ந்து நடிக்கப் போவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக கவுதம் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார். வாய்ப்பளித்த ஞானவேல்ராஜாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அவர்.

எஸ்.டி.ஆர்.

சிம்பு படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முதல்முறையாக தயாரிக்கிறது. கவுதம் கார்த்திக் முதல்முறையாக சிம்புவுடன் சேர்ந்து நடிக்கிறார். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர்.

சூர்யா ரசிகர்கள்

ஸ்டுடியோ கிரீன் வெளியிட்ட அறிவிப்பை பார்த்து சூர்யா ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X