டெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை!

கோலி சோடா 2 மூலம் வில்லனாக அறிமுகமாகியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

டெரர் வில்லனாக நடிக்க ஆசைப்படும் சீமராஜா ஸ்டண்ட் சிவா- வீடியோ

சென்னை: கோலி சோடா 2 மூலம் வில்லனாக அறிமுகமாகியுள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா, தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருபவர்
ஸ்டன் சிவா. காதலுக்கு மரியாதை, சேது, பிதாமகன், நந்தா, வேட்டையாடு விளையாடு, கும்கி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் இவர்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழி படங்களில் ஸ்டன் சிவா பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

கோலி சோடா 2 :

கோலி சோடா 2 :

வேட்டையாடு விளையாடு படத்தில் கமலின் அறிமுகக் காட்சியில் ரவுடியாக நடித்திருப்பார் ஸ்டன் சிவா. பின்னர் பல ஆண்டுகள் கழித்து, கோலி சோடா 2 படத்தில் சாதி சங்கத் தலைவராக நடித்து, வில்லனத்தனம் செய்திருக்கிறார்.

வாய்ப்பு:

வாய்ப்பு:

ஸ்டன் சிவாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுதொடர்பாக, அவரும், இயக்குனர் விஜய் மில்டனும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது தனக்கு எப்படி இந்த வாய்ப்பு வந்தது என்பது குறித்து, ஸ்டன் சிவா விளக்கமளித்தார்.

நடிகனாகும் ஆசை:

நடிகனாகும் ஆசை:

அதுபற்றி அவர் கூறியதாவது, "நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால் முதலில் ஸ்டண்ட் மேனாக தான் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தேன்.

நன்றி.. நன்றி:

நன்றி.. நன்றி:

இந்நிலையில் தான், விஜய் மில்டன் என்னை அழைத்து இந்த வில்லன் கேரக்டரை கொடுத்தார். சீமராஜா என்ற சாதி சங்கத் தலைவர் ரோல் எனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என அனைவரும் பாராட்டினர். விஜய் மில்டனுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் நடிப்பை பாராட்டிய பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.

குணச்சித்திர வேடங்கள்:

குணச்சித்திர வேடங்கள்:

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். ஸ்டண்ட் மாஸ்டரான எனக்கு வில்லனாக நடிப்பது எளிது. ஆனால், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஹீரோ ஆசை:

ஹீரோ ஆசை:

எனக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இருவரும் கராத்தே வீரர்கள். முதல் மகன் உலகளவில் 50வது இடத்தில் இருக்கிறான். இரண்டாவது மகன் 32வது இடத்தில் இருக்கிறான். அவன் தான் இந்தியாவின் நம்பர் ஒன் கராத்தே வீரன். விரைவில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வான் என எதிர்ப்பார்க்கிறேன். மூத்த மகனை வைத்து படம் எடுப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X