மாவோயிஸ்ட் பற்றி படமெடுக்கும் விஜய் இயக்குனர்... ஹீரோவான ஸ்டண்ட் மாஸ்டர்!

வேட்டையன் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா கதாநாயகனாக நடிக்கிறார்

சென்னை: வேட்டையன் திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஸ்டண்ட் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்டன் சிவா. பிஸ்தா, விண்ணுக்கும் மண்ணுக்கும், சிம்ம ராசி, வேட்டையாடு விளையாடு, பேரழகன், அனேகன், இமைக்கா நொடிகள் உள்பட 60 க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Stun Siva become hero!

இரணியன், யூத், ஜித்தன், பிரியமுடன் போன்ற படங்களை இயக்கியவர் வின்சண்ட் செல்வா. இவர் இயக்கும் அடுத்த படத்தில் ஸ்டன் சிவா கதாநாயகனாக நடிக்கிறார்.

காட்டிற்குள் மாவோயிஸ்ட்டாக இருக்கும் ஸ்டன் சிவா சில காரணங்களால் நகரத்திற்குள் வருகிறார். பிரச்சனைகளை முடித்து எப்படி மீண்டும் காடு திரும்புகிறார் என்பதே கதையாம்.

ஜப்பானிய இயக்குனர் அகிரா குருசோவாவின் "தெர்சு உஜாலா" திரைப்படத்தை வேட்டையைன் பட கிளைமேக்ஸ் காட்சி நினைவூட்டும் என்கிறனர் படக்குழுவினர்.

இப்படத்தில் பாகுபலி 2 திரைப்படத்தில் நடித்த காளிதாஸ் என்ற யானையும் முக்கிய பாத்திரமாக நடிக்க உள்ளது. சிவாவுக்கு ஜோடியாக நேகா என்ற கேரளப் பெண் நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததுபோன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

அச்சு ராஜாமணி இசையமைக்கிறார், வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். சென்னை மற்றும் கேரள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X