இது புது டிவிஸ்ட்டா இருக்கே.. மாஸ்டர் சில்வாவும் இனி ஹீரோதான்!

சென்னை: இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியன், வில்லன், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் இயக்குனர் என்று பலரும் ஹீரோக்களாகி உள்ளார்கள். ஹீரோக்கள் வில்லன்களாக, காமெடியனாக மாறியுள்ளார்கள். பல வெற்றி திரைப் படங்களை கொடுத்துள்ளார்கள்.

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டன் சிவா, வின்சென்ட் செல்வாவின் ஆக்‌ஷன் த்ரில்லர் 'வேட்டையன்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பிதாமகன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது தான் ஒருபோதும் எதிர்பார்க்காத ஒன்று என்று கூறுகிறார்.

stun siva becomes hero

“நான் பல படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறேன் என்பது உண்மைதான், அதைச் செய்வதை மிகவும் விரும்பி செய்தேன். ஆனால் நான் ஒரு அதிரடி படத்தில் ஹீரோவாக நடிக்கப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விஜய் மில்டனின் கோலி சோடா 2 இல் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்ததுதான் எனக்கு இந்த பாத்திரத்தை அளித்தது. நான் தற்போது சுசீந்திரனின் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ”

30 வருடங்களாக சினிமா துறையில் இருந்து பாலிவுட் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்களுக்கான அதிரடி காட்சிகளை ஹெல்மிங் செய்யும் சிவா, தனது சில படங்களில் நடித்திருப்பதால் நடிப்பு தனக்கு ஒன்றும் புதிதல்ல என்று கூறுகிறார். இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் வேட்டையன், பெங்களூர், கோபிசெட்டிபாளையம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் நேகா, வைஷ்ணவி சந்திரன், துஷாரா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

stun siva becomes hero

பழங்குடி கிராமத்தில் வசிக்கும் சிவா வளர்க்கும் யானையை சிலர் கடத்த முற்படும்போது, அதை தடுக்க முயற்சிக்கும் சிவா மீது மாவோயிஸ்ட் முத்திரை குத்தப்படுகிறது. இதிலிருந்து எப்படி வெளியே வந்து அவர் யானையை காப்பாற்றுகிறார் என்பதே கதை. பாகுபலி படத்தில் நடித்த யானை இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X