twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் அமைதி அஜீத் ஆக்ரோசம்... ஸ்டண்ட் மேன் சம்பத் ராம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

    |

    சென்னை: விஜய் சார் எப்பவும் அமைதியா தான் இருப்பார். நான் முதன்முதலில் விஜய் சார் நடித்த தமிழன் படத்துல, வில்லனுக்கு தம்பியா ஒரு சின்ன கேரக்டர்ல ஃபைட் சீன்ல நடிச்சிருந்தேன். ஆனால், அஜீத் சார் அப்படி கிடையாது ஃபைட் சீன்ல நடிக்கும்போது அந்த சீன் நல்ல வரணும்கிறதுக்காக ரொம்ப ஆக்ரோசத்தோட இருப்பாரு என்று தன்னுடைய சினிமா அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஸ்டண்ட் நடிகர் சம்பத் ராம்.

    விஜய் சார் சூட்டிங் ஸ்பாட்டுல யார்கிட்டேயும் பேசமாட்டார். கொஞ்சம் கூச்ச சுபாவம் அவருக்கு. அவர் பாட்டுக்கு தனியாவே உக்காந்திருப்பார். ஆனால், யார் என்ன பண்றாங்கன்னு ரொம்ப க்ளோசா வாட்ச் பண்ணிட்டே இருப்பாரு. பேசி பழகிட்டாருன்னா அவங்க கூட நல்லா பேசுவாருன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அஜீத் சார் அப்படி கிடையாது. எல்லார் கூடவும் நல்ல சகஜமா பேசிக்கிட்டு இருப்பாரு.

    Stunt Man Sampath Ram Exclusive Interview

    விஜய் சார் சூட்டிங் ஸ்பாட்டுல யார்கிட்டேயும் பேசமாட்டார். கொஞ்சம் கூச்ச சுபாவம் அவருக்கு. அவர் பாட்டுக்கு தனியாவே உக்காந்திருப்பார். ஆனால், யார் என்ன பண்றாங்கன்னு ரொம்ப க்ளோசா வாட்ஸ் பண்ணிட்டே இருப்பாரு. பேசி பழகிட்டாருன்னா அவங்க கூட நல்லா பேசுவாருன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, அஜீத் சார் அப்படி கிடையாது. எல்லார் கூடவும் நல்ல சகஜமா பேசிக்கிட்டு இருப்பாரு.

    எனக்கு விஜய் சார் கூட நல்ல பேசி பழகுறதுக்கு வாய்ப்பு கிடைச்சது போக்கிரி படத்துல தான். அதுல எனக்கு ப்ராம்ப்டான ஒரு கேரக்டர் அமைஞ்சது. அந்த படத்துல நடிக்கும்போது, அண்ணா பாத்துன்னா, நான் உங்களை அடிக்கும்போது கொஞ்சம் பாத்து வாங்கிக்கோங்கண்ணா, அப்படின்னு சொல்லி தான் ஃபைட் பண்ண ஆரம்பிப்பாரு.

    ஆனா, இதுல என்ன ஆச்சரியம்னா, அவர் அடிக்கிறது ஒரு அடி கூட நம்ம மேல படாது. அந்த அளவுக்கு ரொம்ப பெர்ஃபெக்டா, எந்த லெவல்ல பண்ணனுமோ அந்த அளவுக்கு ஃபைட் சீன் பண்ணுவாரு. விஜய் சார் கூட கடைசியா ஃபைட் பண்ணது புலி படத்துல தான்.

    அந்த படத்துல ஒரு சீன் தான் பண்ணினேன். ஓபனிங் சீன். அதுல மறக்க முடியா சீன் என்னன்னா என்னோட காலை பிடிச்சிக்கிட்டே வர்றது. அந்த சீன்ல நடிக்கும்போது, எனக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. ஆனா விஜய் சார் அதைப்பத்தி கவலைப்படாம, டைரக்டர் சொன்ன உடனே எந்த ரியாக்ஷனும் காட்டாம, அந்த சீன்ல என்னோட காலை பிடிச்சிக்கிட்டே டயலாக் பேசுனாரு. எனக்கு மொதல்ல பயம் இருந்தது. ஆனா வெறும் நடிப்புதானேன்னு நினைச்சதும் பயம் போயிடிச்சி. நானும் ரொம்ப கூல நடிச்சிட்டு போயிட்டேன்.

    ஆனால், படம் ரிலீஸான பின்னாடி, விமர்சனம்லாம் வந்தது. என்னடா இது, விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ, அவரு போய் ஒரு சின்ன ஆர்ட்டிஸ்ட் காலை பிடிக்கலாமான்னு எழுதியிருந்தாங்க. ஆனால், விஜய் சார் அந்த விமர்சனத்தை பத்தி கண்டுக்கவே இல்லை.

    அவரைப் பத்தி சொல்லணும்னா, அவர்கிட்ட போய் முதல்ல கதையை சொல்லியேச்சுன்னா, நடுவுல நம்மள எந்த தொந்தரவும் பண்ணமாட்டார். டைரக்டர் என்ன சொல்றாரோ, அதை அப்படியே கேட்டுட்டு நடிச்சி கொடுத்திட்டு போய்கிட்டே இருப்பாரு. தன்னோட வேலையை ரொம்ப கச்சிதமா முடிச்சிடுவாரு. சுருக்கமா சொல்லணும்னா, புரொடியூசருக்கும் சரி, டைரக்டருக்கும் சரி எந்த தொந்தரவும் தரமாட்டாரு. ஒன்ஸ் கதையை கேட்டு ஒத்துக்கிட்டாருன்னா மறுபேச்சே பேசாம ஒத்துக்கிட்டு நடிச்சி கொடுப்பாரு என்று குறிப்பிட்டார் சம்பத் ராம்.

    English summary
    Vijay sir is always quiet. The first time I played Vijay sir's Tamil movie 'Thamizhan' was a small character fight scene. But, Ajit sir is not such a fight scene when the scene is very good, said Stunt Man Sampath Kumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X