ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சில்மிஷம்.. புகார் அளித்த விசித்ராவை கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டர் இவர்தானா?

சென்னை: நடிகை விசித்ரா தனக்கு சினிமாவில் நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் படத்தில் 20 வருஷத்துக்கு முன்பாக நடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தன்னை தகாத முறையில் தொட்ட நிலையில், அவர் குறித்து ஸ்டன்ட் மாஸ்டரிடம் புகார் தெரிவித்த உடனே அந்த ஸ்டன்ட் மாஸ்டர் தப்பு செய்தவரை விட்டு விட்டு தன்னை ஓங்கி கன்னத்தில் அறைந்ததாக சொன்ன சம்பவம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Stunt Master A Vijay slapped Vichitra reveals by Joe Michael

இந்நிலையில், அந்த ஸ்டன்ட் மாஸ்டர் யார் என்றும் அவரது பெயர் உள்ளிட்ட மொத்த ஜாதகத்தையும் பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் அம்பலப்படுத்தி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விசித்ராவை காப்பாற்றிய ஷாஜி: பாலகிருஷ்ணா படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரால் விசித்ராவுக்கு ஏற்பட்ட தொல்லைகளில் இருந்து அவரை காப்பாற்றியதே ஹோட்டல் மேலாளர் தான் என்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையாக மாற்றி விசித்ராவை காப்பாற்றிய அந்த ஷாஜியை தான் பின்னர் விசித்ரா திருமணம் செய்துக் கொண்டார் என்றும் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டே விசித்ரா விலகி விட்டதாகவும் கணவருடன் சேர்ந்து ஹோட்டல் பிசினஸ் எல்லாம் பார்த்து வந்த விசித்ரா தற்போது மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

கன்னத்தில் அறைந்த ஸ்டன்ட் மாஸ்டர்: சூட்டிங் ஸ்பாட்டில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் நடிகை விசித்ராவை தகாத முறையில் தொட்ட நிலையில், அவர் குறித்து அந்த படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரிடம் விசித்ரா புகார் அளித்துள்ளார். ஆனால், குற்றம் செய்தவரை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த விசித்ராவை ஓங்கி கன்னத்திலேயே அந்த ஸ்டன்ட் மாஸ்டர் அறைந்த சம்பவத்தையும் விசித்ரா சொன்ன நிலையில், அந்த ஸ்டன்ட் மாஸ்டர் யார் என்பதை ஜோ மைக்கேல் தற்போது வீடியோவில் அம்பலப்படுத்தி உள்ளார்.

பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்: டோலிவுட் சினிமாவின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டராக தற்போது வரை பல படங்களுக்கு பணியாற்றி வரும் ஏ. விஜய் தான் அந்த ஸ்டன்ட் மாஸ்டர் என்றும் அவர் குறித்து விசித்ரா புகார் அளித்தும் அவருக்கு நடிகர்கள் சங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் பொழப்ப பாருங்க எனக் கூறியதாக சொல்லி உள்ளார். சிம்மதாரி, தூக்குடு, விக்ராந்த் ரோணா உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X