நடிகர் சங்க கட்டடம்.. கேப்டன் பெயரை சூட்ட வேண்டும்.. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்!

சென்னை: நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் இருமல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதே அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவியது. இதையடுத்து, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவர் நலமுடன் இருப்பதாகவும் தயவு செய்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Stunt Master Jaguar Thangam Emostional interview about captain vikayakanth

இதையடுத்து,கடந்த 11ந் தேதி விஜயகாந்த் வீடு திரும்பினார். அவர் வீடு திரும்பிய அடுத்த சில மணி நேரத்திலேயே அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்படும் நடைபெறும் என்று, அதில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பிரேமலதா பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று காலமானார்: இதையடுத்து, கேப்டன் விஜயகாந்த் நேற்று முன்தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்குக் கொரோனா தொற்று பாதிப்பை உறுதி செய்தது மருத்துவமனை. சுவாச பிரச்சனை காரணமாகச் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கதறி அழுத மக்கள்: இதையடுத்து, மக்களின் பார்வைக்காகவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் விஜயகாந்தின் உடல், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வாரி வாரி கொடுத்த விஜயகாந்தின் முகத்தை கடைசியாக பார்த்துவிட வேண்டும் என்று கதறி அழுதபடி வீட்டு வாசலில் தொண்டர்கள் கண்ணீர் மல்க நிற்கும் காட்சியை பார்க்க முடிந்தது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து பெரும் வெற்றி அடைந்தவர்கள் பட்டியலில் எம்ஜிஆருக்கு பின்பு விஜயகாந்த் தான். இதனால், தொண்டர்கள் அவரை கருப்பு எம்ஜிஆர் என்று அன்போடு அழைத்து வந்தனர்.

நடிகர் சங்கத்திற்கு கேப்டனின் பெயர்: இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், விஜயகாந்தின் இழப்பால் திரையுலகமே வீழ்ந்துவிட்டது போல தோன்றுகிறது. ஏன் என்றால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் அவர் தூக்கி நிறுத்துவார். அவரிடம் உதவி வேண்டும் என்று கேட்கக்கூட வேண்டாம், நம்மை பார்த்தாலே என்ன பிரச்சனை என்று அழைத்து பேசுவார். இன்று நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான். இதனால், நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டவுடன் கேப்டன் விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்று நாசர், விஷால், கார்த்திக்கிடம் கோரிக்கை வைக்கிறேன் என்று ஜாக்குவார் தங்கம் பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X