Vishal34 movie: விஷால்34 படத்தின் க்ளைமாக்ஸ் சூட்டிங்.. விஷால் யாரோட மல்லு கட்டறாரு பாருங்க!

சென்னை: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளியாகி 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

விஷாலின் நடிப்பில் இத்தகைய சாதனையை படைத்துள்ள முதல் படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துவரும் விஷால்34 படத்தின் க்ளைமாக்ஸ் சூட்டிங் துவங்கியுள்ளது.

Stunt master Kanal kannan going to join with Vishal in his Vishal34 movie

விஷால் -ஹரி கூட்டணியில் இணைந்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்: நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. விஷால் கேரியரில் முதல்முறையாக இந்த சாதனை அரங்கேறியுள்ளது. தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

டைம் ட்ராவலை மையமாக கொண்டிருந்த இந்த படத்தில் இருவேறு கெட்டப்புகளில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா, அதிரடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றி கொடுத்துள்ள உற்சாகத்துடன் தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் 34 படத்தில் நடித்து வருகிறார் விஷால். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் சூட்டிங், கடந்த சில மாதங்களாக நடந்துவந்த நிலையில், தற்போது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்கான சூட்டிங்கை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்.

மிகவும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் இந்த க்ளைமாக்ஸ் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றிவரும் நிலையில், இந்த க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் கனல் கண்ணன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, க்ளைமாக்ஸ் காட்சிகள் அதிரடியாக ரசிகர்களை கவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஷால் மற்றும் கனல் கண்ணன் இணைந்து சூட்டிங்கின்போது எடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

முன்னதாக விஷால் -கனல் கண்ணன் இணைந்து சண்டக்கோழி, திமிரு, சத்யம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படத்தில் விஷால் கிராமத்து கெட்டப்பில் காணப்படுகிறார். படம் கிராமத்து கதைக்களத்தில உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வித்தயாசமான வகையில் போலீஸ் கதைக்களத்தில் இந்தப் படத்தை ஹரி உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் விஷால் -ஹரி கூட்டணி இணைந்திருந்த நிலையில், மூன்றாவது படமாக விஷால்34 படம் உருவாகி வருகிறது.

Stunt master Kanal kannan going to join with Vishal in his Vishal34 movie

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் இணைந்துள்ள நிலையில், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்தப் படத்தில் விஷாலுடன் நடித்துவரும் யோகிபாபு அவருக்கு ஒரு முருகன் சிலையை பரிசளித்துள்ளார். இதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார் விஷால். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் நிறுவனமும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X