நாம 80 பர்சென்ட் சொன்னா.. விஜய் 200 பர்சென்ட் செய்வாரு.. வாரிசு ஸ்டண்ட் மாஸ்டர் சுவாரஸ்யம்!
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தீபாவளியையொட்டி விஜய்யின் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது.
பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளுக்காகத்தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விஜய்யின் வாரிசு படம்
நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ஷாம், ஜெயசுதா, சங்கீதா கிரிஷ், ஸ்ரீகாந்த், பிக்பாஸ் சீசன் 6 புகழ் சம்யுக்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ரசிகர்கள் உற்சாகம்
படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில், போஸ்டர் என அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இரு தினங்களுக்கு முன்பு தீபாவளியையொட்டி படத்தின் சூப்பர் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

பர்ஸ்ட் சிங்கிளுக்காக வெயிட்டிங்
அடுத்ததாக படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசையமைப்பாளர் தமன் ரசிகர்களுக்கு ஹின்ட் கொடுத்திருந்தார். இதனிடையே படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு தற்போது துபாயில் தன்னுடைய வெகேஷனை விஜய் என்ஜாய் செய்து வருகிறார். இவருடன் தளபதி 67 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர்.

குடும்ப சென்டிமெண்ட் படம்
பிரபல தெலுங்குப்பட இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு படம் குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற அவரது முந்தைய படங்களை போல ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன்
இந்தப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன் இணைந்துள்ளார். தெறி படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இந்தப் படத்தில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய்யுடன் இணைந்தது குறித்து திலிப் மிகுந்த உற்சாகத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

200% தரும் விஜய்
மேலும் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் திலீப் சுப்பராயன். நாம் 80 சதவிகித வேலையை கொடுத்தால் அதை 200 சதவிகிதமாக மாற்றி விஜய் மாஸ் காட்டுவார் என்றும், தெறியில் இருந்ததை காட்டிலும் தற்போது வாரிசு படத்தில் மேலும் இளமையாக விஜய் மாறியுள்ளதாகவும் திலிப் கூறியுள்ளார்.

வாரிசு பொங்கல்
பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ள வாரிசு படம், வாரிசு பொங்கலாக ட்விட்டரில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படத்துடன் அஜித்தின் துணிவும் வெளியாகவுள்ள நிலையில், இரண்டு படங்களும் ரசிகர்களை கவர்ந்து இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாக வேண்டும் என்றும் திலிப் விருப்பம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











