twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “வணங்கான் பட சூட்டிங்ல சூர்யாவுக்கும் பாலாவுக்கும் என்ன பிரச்சினை?”: இவரு சொன்னா சரியா இருக்கும்

    |

    சென்னை: பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வணங்கான்.'

    இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

    நடிப்பதோடு சூர்யாவே தயாரிக்கும் 'வணங்கான்' படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்றன.

    கொண்டாட்டத்திற்கான நேரம்.. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 6 ப்ரமோ இதோ! கொண்டாட்டத்திற்கான நேரம்.. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 6 ப்ரமோ இதோ!

    சூர்யாவுக்கு கை கொடுத்த பாலா

    சூர்யாவுக்கு கை கொடுத்த பாலா

    சரியான திறமைகள் இருந்தும், ஆரம்ப காலங்களில் அடுத்தடுத்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்தார் சூர்யா. அந்நேரத்தில் தான் இயக்கிய 'நந்தா' படத்தில் சூர்யாவை ஹீரோவாக்கி, அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தார் டைரக்டர் பாலா. அன்றுமுதல் பாலா - சூர்யா இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது.

    பிதாமகன் படம் செய்த மேஜிக்

    பிதாமகன் படம் செய்த மேஜிக்

    'நந்தா' படத்தைத் தொடர்ந்து சூர்யா, பாலா கூட்டணி 'பிதாமகன்' படத்திலும் இணைந்தது. இந்தமுறை ச்சியான் விக்ரமும் இவர்களுடன் கூட்டணி வைத்தார். முன்னதாக பாலாவின் முதல் படமான சேதுவில், விக்ரம் தான் ஹீரோவாக நடித்திருந்தார். விக்ரம், சூர்யா, பாலா என சூப்பர் காம்போவில் வெளியான 'பிதாமகன்', தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    வணங்கான் தொடங்கிய கதை

    வணங்கான் தொடங்கிய கதை

    நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து சூர்யா, பாலா கூட்டணி இணையும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில், சிறிய கேமியோ ரோலில் மட்டும் வந்துபோனார் சூர்யா. இந்நிலையில், இருவரும் பல வருட இடைவேளைக்குப் பிறகு, தற்போது 'வணங்கான்' படத்தில் இணைந்துள்ளனர். இதன் முதற்கட்ட சூட்டிங், கன்னியாகுமரி பகுதிகளில் நடைபெற்றது.

    சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சினை?

    சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சினை?

    "வணங்கான்' என்ற டைட்டிலுடன், சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி, இசைக்கு ஜிவி பிரகாஷ் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாக, சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவிப்பு வெளியானது. ஆனால், சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சினை என்றும், இதனால் சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இது வதந்தி என கூறும் விதமாக, சூர்யாவும் ட்வீட் செய்திருந்தார்.

    ஸ்டண்ட் சில்வா சொன்ன உண்மை

    ஸ்டண்ட் சில்வா சொன்ன உண்மை

    இந்நிலையில், 'வணங்கான்' சூட்டிங்கில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே என்ன பிரச்சினை என, அந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றும் சில்வா கூறியுள்ளார். தனியார் யூடியூப்பில் பேட்டி அளித்துள்ள அவர், முதலில் சூர்யா, பாலா இருவருடனும் வேலை பார்க்குறது நல்ல அனுபவம் எனக் கூறியுள்ளார்.

    ரசிகர்கள் நிம்மதியா இருக்கலாமா?

    ரசிகர்கள் நிம்மதியா இருக்கலாமா?

    மேலும், "வணங்கான் படத்தில் சூர்யா - பாலா இடையே எந்தப் பிரச்சினையும் இல்லையென்றும், இப்போது தான் இரண்டு சண்டைக் காட்சிகளை எடுத்துமுடித்தோம். சூட்டிங்ல எந்த மாற்றமும் இல்லாம எல்லாமே நல்லபடியாதான் போய்ட்டு இருக்கு" என, ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளார்.

    English summary
    Stunt master Silva has spoken about the current status of Bala and Surya's 'Vanangaan' film. He also shares his personal experience with them ( பாலா, சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தின் தற்போதைய நிலை குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியுள்ளார். மேலும், அவர்களுடன் பண்புரிந்த அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார் )
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X