Ajithkumar: குட் பேட் அக்லி Billa is Back-ன்னு சொல்ற மாதிரி இருக்கும்.. ஹைப்பை ஏத்திவிட்ட சுப்ரீம் சுந்தர்

சென்னை: நடிகர் அஜித்குமார் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். இதுமட்டும் இல்லாமல் அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் நடைபெறவுள்ள ஜிடி4 கார் பந்தயத்தில் கலந்து கொள்ளவும் உள்ளார். இதற்காக அபுதாபியில் கடந்த சில மாதங்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றார். இந்நிலையில் குட் பேட் அக்லி படம் குறித்து அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

பொதுவாக நடிகர் அஜித்குமார் ஒரு படத்தில் முழுவதுமாக நடித்து முடித்த பின்னரே மற்றொரு படத்தில் இணைவார். ஆனால் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போதே, குட் பேட் அக்லி படத்தில் கமிட் ஆனார். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. அதாவது, விடாமுயற்சி படத்தின் இயக்குநர் மகிழ்திருமேனிக்கும் அஜித்குமாருக்கும் இடையில் பல பிரச்னைகள் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. அதேபோல், லைகா நிறுவனத்திற்கும் அஜித்குமாருக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பு நின்றுவிடுமோ, படம் கைவிடப்பட்டுவிடுமோ என்றெல்லாம் கூட பேச்சுகள் அடிப்பட்டது.

supreme sundar ajithkumar good bad ugly

இப்படியான பேச்சுகளுக்கு மத்தியில் குட் பேட் அக்லி படத்தின் அறிவிப்புகள் வந்தது மட்டும் இல்லாமல், அடுத்தடுத்து அப்டேட்கள் வந்து கொண்டே இருந்தது. முதலில் எந்த படம் ரிலீஸ் ஆகுமா, என்ற கேள்வி ரசிகர்களுக்கு ஏற்பட்டது. வலிமை படத்தினைப் போல் விடமுயற்சி படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் தொடர்ந்து கேட்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வாரி வழங்கியது. குறிப்பாக படத்தில் அஜித்தின் லுக் அனைத்தும் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

சுப்ரீம் சுந்தர்: குட் பேட் அக்லி படத்தினை மைத்ரி மூவீஸ் தயாரிக்கின்றது. மேலும் படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகின்றார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாந்த் இசை அமைக்கின்றார். படத்தின் போஸ்டர்களில் அஜித் அட்டகாசமான லுக்கில் இருப்பதால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளார்கள் எனலாம். இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

supreme sundar ajithkumar good bad ugly

பில்லா: அதாவது குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருப்பதாகவும், படம் பில்லா படத்தில் வரும் வசனத்தைப் போல், Billa is Back- ன்னு சொல்ற மாதிரி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சுப்ரீம் சுந்தரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள். அதுவும் 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தினைப் போல் படம் இருக்கும் எனக் கூறியுள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

supreme sundar ajithkumar good bad ugly

எதிர்பார்ப்பு: பில்லா படத்தில் அஜித் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பார். படம் முழுக்க பில்லா கதாபாத்திரம் கோட் அணிந்து கொண்டு கேங்க்ஸ்டர் போல் காட்சி அளிப்பார். அந்தப் படத்தினைப் போல் இந்தப் படத்திலும் அஜித் செம ஸ்டைலாக இருப்பார் என சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார். படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், விடாமுயற்சி படம் இன்னும் ரிலீஸ் ஆகாததால், படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

supreme sundar ajithkumar good bad ugly

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X