Vidaamuyarchi: விடாமுயற்சி தாமதமாக இதுதான் காரணமா?.. அஜித்துக்கு நெருக்கானவரால் வெளியே வந்த உண்மை

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் அடுத்து எந்த படம் ரிலீஸ் ஆகும் என்ற சந்தேகத்திலேயே ரசிகர்கள் உள்ளார்கள் எனலாம். அஜித் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகின்றார். அதில் லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றார். விடாமுயற்சி படத்திற்குப் பின்னர், அஜித் கமிட் ஆன படம், குட் பேட் அக்லி. இந்தப் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகின்றார். இதில் மிக நீண்ட காலமாக இன்னும் படத்தின் படப்பிடிப்பே முடியாமல் உள்ள படம் என்றால் அது விடாமுயற்சிதான். இதற்கு பல காரணங்கள் சினிமா உலகில் சொல்லப்பட்டு வந்த நிலையில், அஜித்துக்கு மிகவும் நெருக்கமான ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உண்மையான காரணத்தைக் கூறியுள்ளார்.

supreme sundar ajithkumar vidaamuyarchi

நடிகர் அஜித் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பா ஜிடி3 ரக கார் பந்தையத்தில் கலந்து கொள்ளப்போகின்றார் என்ற தகவல் அனைவரும் அறிந்ததே. அஜித்குமார் தற்போது நடித்து வரும் படங்களின் அப்டேட்டுகள் வருகின்றதோ இல்லையோ, அவர் கலந்து கொள்ளும் ரேஸ் தொடர்பாக அப்டேட்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. இப்படியான நிலையில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் குறித்து ஒரு அப்டேட்டினை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார்.

supreme sundar ajithkumar vidaamuyarchi

இவர் அஜித்தின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக அஜித்தின் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வரும் சுப்ரீம் சுந்தர், தற்போது அஜித் நடித்து வரும் இரண்டு படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருகின்றார். இவர் சமீபத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் குறித்து பேசியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே போக என்ன காரணம் என்ற கேள்வி, அனைவரது மனதிலும் ஏற்பட்டது. இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

supreme sundar ajithkumar vidaamuyarchi

விடாமுயற்சி: இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, " விடாமுயற்சி படத்தினை இயக்குநர் மகிழ் திருமேனி செதுக்கி வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு தாமதமாக காரணமே, படத்தின் லொக்கேஷன்களினால்தான். படம் சீக்கிரமே வெளியாகும். இந்தப் படத்தில் முற்றிலும் வேறுமாதிரியான அஜித் சாரைப் பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

supreme sundar ajithkumar vidaamuyarchi

குட் பேட் அக்லி: மேலும் குட் பேட் அக்லி படம் குறித்து அவர் கூறுகையில், குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருப்பதாகவும், படம் பில்லா படத்தில் வரும் வசனத்தைப்போல், Billa is Back-ன்னு சொல்ற மாதிரி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். சுப்ரீம் சுந்தரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள். அதுவும் 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தினைப் போல் படம் இருக்கும் எனக் கூறியுள்ளாதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

supreme sundar ajithkumar vidaamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X