Supreme Sundar: விடாமுயற்சி டூ கங்குவா.. ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தரின் வேற லெவல் பிளான்!
சென்னை: சமீபத்தில் அஜித்தின் துணிவு படத்தில் கவனம் ஈர்த்த சுப்ரீம் சுந்தர் தொடர்ந்து அவரது விடாமுயற்சி படத்திலும் கமிட்டாகி வேலை செய்து வருகிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாறறியுள்ள சுப்ரீம் சுந்தர் அய்யப்பனும் கோஷியும் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

தமிழில் அதிகமாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் துணிவு படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்: ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கோலி சோடா, சதுரங்க வேட்டை போன்ற ஆரம்ப படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ள போதிலும் தமிழில் அவருக்கு அஜித்தின் துணிவு படம் மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து தற்போது பணியாற்றி வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அசர்பைஜானில் பணியாற்றி வருகிறார்.
விடாமுயற்சி படம்: அஜித் -மகிழ்திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் விடாமுயற்சி படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக அக்டோபர் மாதத்திலேயே படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மேற்பார்வையில் படக்குழுவினர் சூட் செய்தனர். இதையடுத்து தற்போது அசர்பைஜானிலேயே படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
கார் சேஸிங் காட்சிகள்: தற்போது அஜித், அர்ஜூன் நடிப்பில் படத்தின் கார் சேஸிங் காட்சிகளின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த காட்சிகளை திறம்பட அமைத்து வருகிறார் சுப்ரீம் சுந்தர். இந்நிலையில விடாமுயற்சி சூட்டிங்கிலிருந்து சிறிது கேப் எடுத்துக் கொள்ளவுள்ள சுப்ரீம் சுந்தர், சென்னையில் நடைபெறவுள்ள சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். ஜனவரியில் மீண்டும் துவங்கவுள்ள கங்குவா படத்தின் சூட்டிங்கில் சூர்யாவும் பங்கேற்கவுள்ளார்.
சூர்யாவின் கங்குவா படம்: இந்தப் படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட இன்னும் சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், இந்த சூட்டிங்கில் சூர்யாவிற்கான ஆக்ஷன் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் அமைக்கவுள்ளார். இதற்காக அவர் அஜித்தின் விடாமுயற்சி சூட்டிங்கிலிருந்து இங்கு வரவுள்ளார். இந்தப் படத்தில் திஷா பதானியின் ஆக்ஷன் காட்சிகள் முன்னதாகவே முழுமையாக படமாக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யாவின் ஆக்ஷன் காட்சிகளில் சில மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மலையாள படத்திற்காக தேசிய விருது: சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ள அனிமல் படத்திற்கும் சுப்ரீம் சுந்தர்தான் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களான மோகன்லால், பிரித்விராஜ், மம்முட்டி, செம்பன் வினோத், டொவினோ தாமஸ் போன்றவர்களுடன் பணிபுரிந்துள்ள சுப்ரீம் சுந்தர், மலையாள படத்தில் பணியாற்றியதற்காகவே தேசிய விருதை பெற்றுள்ளார். ஜல்லிக்கட்டு படத்தில் இவரது ஸ்டண்ட் ரசிகர்களை வெகு அதிகமாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











