விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் சேர்ந்து ஸ்க்ரீனில் வரும் காட்சி.. சீக்ரெட் சொன்ன லியோ ஸ்டண்ட் மாஸ்டர்
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் சேர்ந்து லியோ படத்தில் சேர்ந்து வரும் காட்சி குறித்து சண்டை பயிற்சியாளர் தவசிராஜ் பகிர்ந்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.
ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. அதனையடுத்து மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியானது. ஆனால் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே ஆடியோ ரிலீஸை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிரது.

லியோ க்ளிம்ப்ஸ்: லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதேபோல் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அர்ஜுன் ஹரோல்டு தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.
தாஸ்&கோ: இதற்கிடையே படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், விஜய் ஆகிய மூன்று பேரும் ஒரே கேங் என்றும். ஆண்டனி தாஸ், ஹரோல்டு தாஸ் போல் விஜய்க்கு பெயர் லியோ தாஸ் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த கேங்குக்குள் நடக்கும் பிரச்னையும் அதை சுற்றி விரியும் சம்பவங்களும்தான் படத்தின் ஒன்லைன் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

தவசிராஜ்: இந்நிலையில் லியோ படத்தின் சண்டை பயிற்சியாளர் தவசிராஜ் படம் குறித்து பேசுகையில், "விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகிய மூன்று பேரும் படத்தில் ஒரே காட்சியில் தோன்றுவார்கள். அந்த சீனை பார்க்கும்போது வேறு லெவலில் இருக்கும். அந்த சீன் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படத்தை பார்க்கும்போது ரசிகர்கள் சீட்டின் நுனியில்தான் அமர்ந்திருப்பார்கள்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











