Thalapathy68: பீஸ்ட்.. லியோ.. இப்ப தளபதி68.. வெங்கட் பிரபுவின் மாஸ்டர் பிளான்!

சென்னை: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் இசை வெளியீடை வரும் 30ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

படம் சர்வதேச அளவில் அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களும் சிறப்பான வகையில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Stunt masters Anbariv going to join Vijays Thalapathy 68 after Beast and Leo movies

விஜய்யின் தளபதி68 படத்தில் இணையும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ்: நடிகர் விஜய் தன்னுடைய நாளைய தீர்ப்பு படத்தில் துவங்கிய பயணத்தை மிகச்சிறப்பாக தொடர்ந்து வருகிறார். தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் சர்வதேச அளவில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் துவங்கப்பட்டது.

படத்தின் சூட்டிங்கிற்கு இணையாக இந்தப் படத்தின் ப்ரமோஷன்களும் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. காஷ்மீரில் விஜய் மற்றும் த்ரிஷா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகி மாஸ் காட்டின. இதையடுத்து 52 நாட்கள் சூட்டிங்கை அங்கே கடுமையான குளிர், நிலநடுக்கத்திற்கு இடையில் முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு. தொடர்ந்து காஷ்மீர் சூட்டிங்கின் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

Stunt masters Anbariv going to join Vijays Thalapathy 68 after Beast and Leo movies

தொடர்ந்து விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோரின் பிறந்தநாட்களையொட்டி பர்ஸ்ட் சிங்கிள், போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் போன்றவையும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணம் போன்ற இடங்களில் நடத்தப்பட்டு நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

விஜய்யின் 67வது படமாக லியோ அமைந்துள்ள நிலையில், தளபதி 68 படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்துள்ளார் விஜய். இந்தப் படத்தின் பூஜை அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதையடுத்து படத்தின் சூட்டிங்கும் விரைவில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடிக்கவுள்ள நிலையில், சினேகா, பிரியங்கா மோகன் ஆகியோர் ஜோடியாக இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Stunt masters Anbariv going to join Vijays Thalapathy 68 after Beast and Leo movies

இந்த வேடங்களின் வித்தியாசத்திற்காக லாஸ் ஏஞ்சல்சில் சமீபத்தில் விஜய்க்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை ஏகத்திற்கும் குஷியாக்கியது. படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். இந்நிலையில் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் பீஸ்ட் மற்றும் லியோ படத்திலும் இவர்கள்தான் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X