தேதி குறிச்சாச்சு.. விரைவில் மாஸ்டர் ட்ரெயிலர்.. முக்கிய பிரலம் வெளியிட்ட தகவல்!

சென்னை: மாஸ்டர் படத்தின் ட்ரெயிலரை ரிலீஸ் செய்யும் தேதி குறித்து முடிவு செய்துவிட்டதாக அந்தப் படத்தில் பணியாற்றியிருக்கும் முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Anirudh Massive update on Master Release | Lokesh Kanagaraj, Thalapathy Vijay, Diya Menon

கைதி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் மாஸ்டர். விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து மிரட்டவுள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, அர்ஜூன்தாஸ், சாந்தனு பாக்கியராஜ், விஜே ரம்யா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விரைவில் ட்ரெய்லர்

விரைவில் ட்ரெய்லர்

ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவேண்டிய இந்தப் படம் ஊரடங்கு காரணமாக போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் கூட நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் போஸ்ட் புரடெக்ஷன பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் ட்ரெண்ட்

ரசிகர்கள் ட்ரெண்ட்

அதன்படி அண்மையில் ரசிகர்களுடன் லைவில் பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ், மாஸ்டர் படத்தின் ட்ரெயிலரை தான் 6 முறை பார்த்துவிட்டதாகவும் அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு டயலாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று கூறினார். இதனை தொடர்ந்து Mastertrailer என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.

ஸ்டன்ட் சில்வா டிவிட்

ஸ்டன்ட் சில்வா டிவிட்

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான ஸ்டன்ட் சில்வா படத்தின் ட்ரெயிலர் குறித்த முக்கிய தகவல் ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது, மாஸ்டர் ட்ரெயிலர் ரிலீஸ் தேதியை முடிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் மாஸ்டர் ட்ரெயிலர் டேட் லாக்டு என பதிவிட்டுள்ளார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

ஸ்டன்ட் சில்வாவின் இந்த டிவிட் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரது இந்த டிவிட்டை பார்த்த பலரும், சார் தேதியை சொல்லுங்கள் என கெஞ்சாத குறையாக கேட்டுள்ளனர். தேதி முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்டன்ட் சில்வா தெரிவித்திருப்பதால் படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீஸ் ஆகும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X