‘ஸ்டண்ட்’ சில்வா இயக்கத்தில் தமிழில் ரீமேக்காகும் ‘தி கராத்தே கிட்’
சென்னை: வசூலில் சாதனை படைத்த 'தி கராத்தே கிட்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறாராம் 'ஸ்டண்ட்' சில்வா.
சில ஆண்டுகளுக்கு முன் ஜாக்கிசான் மற்றும் வில் ஸ்மித் மகன் ஜெடான் ஸ்மித் நடிப்பில் வெளியான படம் 'தி கராத்தே கிட்'. வசூலில் சாதனை செய்த இப்படம் பல விருதுகளையும் வாரிக் குவித்தது.
12 வயது சிறுவனைச் சுற்றிய கதைக்களம் என்ற போதும், ஆக்ஷன் காட்சிகளுக்கு விறுவிறுப்பு குறைவில்லாத படமான இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்திருக்கிறாராம் ஸ்டண்ட் சில்வா.

தமிழ் பேசிய ஜாக்கி...
ஏற்கனவே, ‘தி கராத்தே கிட்' தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.

சில மாற்றங்களோடு....
தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப சில மாற்றங்களோடு கதையை மாற்றி, இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் ஸ்டண்ட் மாஸ்டர் ‘ஸ்டண்ட்' சில்வா.

லேடி ஜாக்கிசான்...
ஜெடான் ஸ்மித் கதாபாத்திரத்தில் தனது 12 வயது மகனையும், ஜாக்கிசான் கதாபாத்திரத்தில் தனது மனைவியையும் நடிக்கவைக்கிறாராம் சில்வா.

பீட்டர் ஹெயின் தங்கை...
ஸ்டண்ட் சில்வாவின் மனைவி ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயினின் தங்கை என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதேஅதே மாதிரி இருக்கும்....
தி கராத்தே கிட் திரைப்படத்தின் தரத்திற்கு நிகரானதாக தன் திரைப்படமும் இருக்கும் என உறுதியளிக்கிறார் ஸ்டண்ட் சில்வா.


Click it and Unblock the Notifications











