ரஜினிக்கு பதிலாக கத்திக்குத்து வாங்கிய 'கபடி வீரன்' ஹீரோ... ஜாக்குவார் தங்கம் சொன்ன ஷாக் தகவல்!

'கபடி வீரன்' படத்தின் ஹீரோ அதிரடி அரசு, நடிகர் ரஜினியின் உயிரை காப்பாற்றியவர் என ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார்.

சென்னை : கபடி வீரன் படத்தின் ஹீரோ அதிரடி அரசு, நடிகர் ரஜினியின் உயிரை காப்பாற்றியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடிப்பதற்கு பெயர்போன நடிகர் அதிரடி அரசு, இயக்கி நடித்துள்ள படம் 'கபடி வீரன்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

Stuntman saved Rajinis life: Jaquar Thangam

இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகர் ராதா ரவி, நடிகை நமீதா, அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர்கள் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினிக்கு பதிலாக கத்திக்குத்து வாங்கி, அவரது உயிரை காப்பாற்றியவர் அதிரடி அரசு எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, " ரிஸ்க் எடுப்பதற்கு பெயர் போனவர் அதிரடி அரசு. நாம் சொல்லி முடிக்கம் முன்னே அந்த விஷயத்தை செய்து முடித்துவிடுவார். அந்த அளவுக்கு ஆர்வம் மிக்கவர்.

Stuntman saved Rajinis life: Jaquar Thangam

எனக்கு எதாவது பிரச்சினை என்றால், கத்தியுடன் வந்து நின்றுவிடுவார். இவர் வருகிறார் என்றாலே எனது அலுவலகத்தில் உள்ளோரும் பயப்படுவர். மிகுந்த தைரியசாலி.

சில ஆண்டுகளுக்கு முன்னர், கர்நாடகாவில் ரஜினி படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அங்கு திடீரென கலவரம் ஏற்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் ரஜினியை கத்தியால் குத்தவந்தனர். அப்போது குறுக்கேவிழுந்து கத்திக்குத்து வாங்கி ரஜினியின் உயிரை காப்பாற்றியர் அதிரடி அரசு தான்" என அவர் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X