twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த ஸ்டன்ட் கலைஞர் விவேக்

    |

    பெங்களூரு: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர் விவேக் ஷூட்டிங் ஸ்பாட்டில் நிகழ்ந்த விபத்து காரணமாக பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    கன்னட படமான லவ் யூ ராச்சு எனும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திங்களன்று இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டது.

    சார்பட்டா பரம்பரை பாகம்-2... தீவிரம் எடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்! சார்பட்டா பரம்பரை பாகம்-2... தீவிரம் எடுக்கும் இயக்குனர் பா. ரஞ்சித்!

    ஸ்டன்ட் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட வந்த நிலையில், திடீரென மின்சாரம் தாக்கியதில் ஸ்டன்ட் கலைஞர் விவேக் பரிதாபமாக உயிரிழந்தார்.

    லவ் யூ ராச்சு

    லவ் யூ ராச்சு

    கிருஷ்ண லீலா, கிருஷ்ணன் லவ் ஸ்டோரி, எக்ஸ்க்யூஸ் மி உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ள பிரபல கன்னட நடிகர் அஜய் ராவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய கன்னட திரைப்படமான லவ் யூ ராச்சு படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஸ்டன்ட் சீன்

    ஸ்டன்ட் சீன்

    திங்கட் கிழமையான நேற்று ஸ்டன்ட் சீன் ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சங்கர் எனும் இயக்குநர் இயக்கி வருகிறர். (இங்கேயும் ஷங்கரா) வினோத் எனும் ஸ்டன்ட் மாஸ்டர் இந்த சண்டைக் காட்சியை படமாக்கி வந்தார்.

    மின்சாரம் தாக்கி பலி

    மின்சாரம் தாக்கி பலி

    சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் கலைஞர் விவேக் என்பவர் பரிதாபமாக மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் ஒட்டுமொத்த படக்குழுவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்னொரு ஸ்டன்ட் கலைஞரையும் மின்சாரம் தாக்கிய நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    போலீஸ் கஸ்டடி

    போலீஸ் கஸ்டடி

    தயாரிப்பாளர் குரு தேஷ்பாண்டே, இயக்குநர் சங்கர் மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர் வினோத் உள்ளிட்ட மூவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து படத்தின் ஷூட்டிங் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

    எனக்கு தெரியாது

    எனக்கு தெரியாது

    இந்த சம்பவம் நடந்த போது தான் அந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் இருந்ததாகவும், சத்தம் கேட்டதும் அந்த இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்தேன். எப்படி விபத்து ஏற்பட்டது என்பது குறித்து எனக்கு தெரியாது என்றும் அந்த படத்தின் நடிகர் அஜய் ராவ் கூறியுள்ளார்.

    பரபரப்பு குற்றச்சாட்டு

    பரபரப்பு குற்றச்சாட்டு

    மேலும், அஜய் ராவ் இந்த படத்தில் பாதுகாப்பு பணிகள் சரியாக நடக்கிறதா என்பதே தனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றும், ஏதாவது சொன்னால் ஸ்டன்ட் மாஸ்டர் தனது வேலையில் ஹீரோ மூக்கை நுழைக்கிறார் என்று கூறுகிறார் என்றும், இதற்கு முன்னதாக் இரும்பு ரோப் பயன்படுத்தலாமா? என கேட்ட போதும் படப்பிடிப்பு தளத்தில் சர்ச்சை வெடித்தது என்றும் கூறியுள்ளார்.

    நடிக்க மாட்டேன்

    நடிக்க மாட்டேன்

    அஜய் ராவின் இந்த அதிரடி கருத்து பரபரப்பை கிளப்பி இருக்கிறது. யார் மீது தவறு எங்கே என்ன பிரச்சனை நடந்தது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஸ்டன்ட் கலைஞர் விவேக்கிற்கு உரிய நீதி கிடைக்கும் வரை இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

    இந்தியன் 2 படப்பிடிப்பிலும்

    இந்தியன் 2 படப்பிடிப்பிலும்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படப்பிடிப்பிலும் இண்டஸ்ட்ரியல் கிரேனை எடுத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதன் காரணமாகத் தான் ராட்சத கிரேன் அறுந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கன்னட இயக்குநர் சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் உயிர்ச்சேதம் ஆகி உள்ளது பெரும் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது.

    English summary
    Stuntman Vivek dies due to electrocution in Kannada movie during a stunt scene which shot on Monday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X