»   »  நம்ம அதிதி பாலனா இது..? செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அருவி!

நம்ம அதிதி பாலனா இது..? செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அருவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
செம ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த அதிதி பாலன்- வீடியோ

சென்னை : கடந்த ஆண்டு வெளியான 'அருவி' படத்தில் நாயகியாக நடித்த அதிதி பாலன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

'அருவி' படத்தில் நடித்ததன் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றவர் தனது சிறப்பான நடிப்புக்காக விருதுகளையும் அள்ளினார்.

இந்நிலையில், பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு அதிதி மிக ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதிதி பாலன்

அதிதி பாலன்

கடந்த ஆண்டு புதுமுக நடிகையாக அறிமுகமானவர் அதிதி பாலன். அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

எச்ஐவி நோயாளிகளின் வலியையும், இந்த சமூகம் எப்படி அவர்களை ஒதுக்குகிறது என்ற கருத்தையும் இயக்குநர் இந்தத் திரைப்படம் மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.

சிறந்த நடிப்பு

சிறந்த நடிப்பு

பக்கத்து வீட்டுப் பெண் போன்று படத்தில் தோன்றும் அதிதி பாலன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார். மிக நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு விருதுகளும் குவிந்தன.

ஸ்டைலிஷ் லுக்

படத்திலும், மேடைகளிலும் ஹோம்லி லுக்கில் மட்டுமே தோன்றிய அதிதி தற்போது செம ஸ்டைலான லுக்கில் தோன்றியுள்ளார். JFW பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இது நம்ம அதிதியா என ரசிகர்களே ஆச்சரியமடைந்துள்ளனர்.

English summary
Aruvi heroine Aditi balan welcomed by fans. Now, Aditi balan's Stylish look pose featured in JFW magazine cover.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil