எரிந்து சாம்பலான விஜய்யின் ஸ்டைலிஸ்ட் சென்ற உபேர் கேப்: வீடியோ இதோ
சென்னை: விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்டான பல்லவி சிங் சென்ற உபேர் டாக்சி தீப்பிடித்து எரிந்துவிட்டது.
திரையுலக பிரபலங்களின் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்டாக உள்ளார் பல்லவி சிங். அவர் விஜய், சமந்தா, நாக சைதன்யா, அகில், அனிருத் உள்ளிட்டோருக்கு ஸ்டைலிஸ்டாக இருந்துள்ளார்.
அவர் சென்னையில் உபேர் டாக்சியில் பயணம் செய்துள்ளார்.
தீ
உபேர் டாக்சி டிடிகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காருக்குள் இருந்து புகை வருவதை பார்த்து பல்லவி டிரைவரிடம் கூறியுள்ளார். காரில் இருந்து தீப்பொறி வருவதாகக் கூறி அந்த வழியாக சென்றவர்கள் தெரிவித்து டாக்சியை நிறுத்தச் செய்துள்ளார். அந்த டாக்சியில் இருந்த பல்லவியின் ஐடி கார்டுகள், பர்ஸ் எல்லாம் எரிந்துவிட்டது. டாக்சி முழுவதுமாக எரிந்துவிட்டது. இவ்வளவு நடந்தும் உபேர் நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என்று பல்லவி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பல்லவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இதற்கிடையே பல்லவி தான் சென்ற கார் எரிந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனா
பல்லவியின் கார் எரிந்தபோது அந்த வழியாக தான் சென்றதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர்
பல்லவியின் ட்வீட்டை பார்த்த உபேர் நிறுவனம் அவரின் செல்போன் எண்ணை கேட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











