twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுபாஸ்கரனின் வாழ்க்கையை படமாக்க தயாராகும் முன்னணி இயக்குனர்கள்

    |

    சென்னை : சுபாஸ்கரன் லைகா மொபைல்ஸ் நிறுவனர் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனர் .இவர் கத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகினார் .தனது முதல் படத்தின் மூலமே பல சோதனைகளையும் பிரச்சினைகளையும் கடந்து தான் தயாரிப்பாளர் ஆகினார் சுபாஸ்கரன் .

    தற்போது சுபாஸ்கரனுக்கு சென்னையில் நடந்த ஒரு விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது .இதில் கலந்து கொண்ட இயக்குனர் மணிரத்னம் சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றை தான் படமாக்க ஆசை படுவதாக கூறினார்.அந்த அளவுக்கு அவர் வாழ்க்கையில் கடினங்களை கடந்து இன்று மிக பெரிய தொழிலதிபராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார் என புகழாரம் சூட்டினார்.

    subashkaran is proud tamilan globally

    இதே விழாவிற்கு தாமதமாக வந்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது கத்தி படத்தின் போது ஏற்பட்ட சிக்கல்களையும் சுபாஸ்கரன் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் .சுபாஸ்கரன் பல பிரச்சினைகளுக்கு இடையே பல கடினங்களை தாண்டி லண்டன் சென்று இன்று தனி ஒரு ஆளாய் மிக பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார் ,நம்மை ஒரு காலத்தில் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் இன்று லண்டனில் சுபாஸ்கரன் எனும் தமிழனுக்கு கீழ் பணியாற்றுவது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறினார் ,இறுதியில் தான் சுபாஸ்கரனின் வாழ்க்கையை கண்டிப்பாக படமாக்க ஆசை படுவதாய் கூறினார் .

    subashkaran is proud tamilan globally

    அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கூச்சலிட்டு முருகதாஸ் சார் இதையே தான் சற்று நேரத்திற்கு முன் மணிரத்னம் கூறினார் என்று கூற முருகதாஸ் சிரித்து கொண்டே ஓ மணிசார் சொல்லிட்டாரா பரவால்ல அவர் பார்ட் 1 பண்ணட்டும் நான் பார்ட் 2 பண்றேன் என்று கூறினார் .

    subashkaran is proud tamilan globally

    தனி ஒரு மனிதனாய் போராடி இலங்கையில் இருந்து லண்டன் சென்று அங்கு தொழில் துவங்கி இன்று மிக பெரிய தொழிலதிபராய் வளர்ந்திருக்கிறார் சுபாஸ்கரன். தான் செல்லும் வழியில் தன்னுடன் எடுத்து வந்த பையை விட்டு ஆற்றை கடந்து எந்த ஒரு உடமையும் இல்லாமல் லண்டன் சென்றவர் என முருகதாஸ் குறிப்பிட்டார் .அந்த அளவுக்கு வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் இமயத்தை வெல்லலாம் என்பதற்கு சுபாஸ்கரன் மிக பெரிய எடுத்துகாட்டு .தற்போது தயாரிப்பிலும் கால் பதித்து சிகரம் தொடும் படங்களை தயாரித்து வருகிறார் சுபாஸ்கரன்.

    சுபாஸ்கரன் தயாரிப்பை தாண்டி பல நற்தொண்டுகளை செய்து வருகிறார் சோமேலியாவில் வறுமையில் வாழும் பல குடும்பங்களுக்கு தண்ணீர் சேமிப்பு தொட்டி கட்டி தந்துள்ளார் மேலும் பலரின் படிப்புக்கு உதவியுள்ளார் ,இவரை பாராட்டி மலேசியாவில் உள்ள புகழ் மிக்க பல்கலைக்கழகம் ஒன்று விருது வழங்கி டாக்டர் பட்டம் வழங்கியது . சுபாஸ்கரனின் வாழ்க்கையை இரு இயக்குனர்களும் இயக்க தயாராகி உள்ளனர் .இதில் யார் முதலில் படமெடுப்பார்கள் அல்லது முருகதாஸ் கூறியது போல் தங்களுக்குள் பிரிந்து பார்ட் 1 மற்றும் பார்ட் 2 எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    லைக்கா நிறுவனம் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு மிக பிரமாண்டமான நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இன்னும் சொல்ல போனால் பல மிக பெரிய ஜாம்பவான் நிறுவனங்கள் கூட தமிழ் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்ட காலகட்டத்தில் , பிரமாண்டத்தை மட்டும் அல்லாமல் பல புதிய முயற்சிகளுடன் , புதிய யுக்திகளுடன் அசுர வேகத்தில் லைக்கா பயணித்து வருகிறது .
    லைக்கா இஸ் லைக்டு பை எவரிஒன் என்று தன் படைப்புகள் மூலம் நிரூபிக்க இருக்கிறார் சுபாஷ் கரண்.

    சுபாஸ்கரன் அவர்கள் இலங்கையில் பல காலணிகளை உருவாக்கி உள்ளார். இன்று சர்வதேச அளவில் சுபாஸ்கரன் என்ற பெயரை சொன்னால் ஒரு தனி மரியாதை கிடைக்கும் அளவுக்கு நம் தமிழ் இனத்திற்கு பெயர் சேர்த்து உள்ளார். இன்னும் பல பல வெற்றிகள் இவர் செய்ய வேண்டும் என்று நாம் இவரை வாழ்த்துவோம் .

    English summary
    recently held function in chennai , producer subashkaran was being honored and many legend directors like manirathnam & murugadoss appreciated his life and the handwork he came across . also they have planned to do a bio.pic with true incidents of his life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X