விக்ரம் மகனுடன் என் மகள் நடிக்கிறாரா?: கவுதமி விளக்கம்
Recommended Video

சென்னை: விக்ரம் மகனுக்கு ஜோடியாக தனது மகள் நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.
கவுதமி தனது மகள் சுப்புலட்சுமியை தன் வழியில் நடிகையாக்கி பார்க்க விரும்புகிறார் என்று செய்திகள் வெளியாகின. இதற்காக அவர் பெரிய இயக்குனர்களை அணுகி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சுப்புலட்சுமி பாலா இயக்கி வரும் வர்மா பட ஹீரோயினாகிவிட்டதாக தகவல் வெளியானது.

வர்மா
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சீயான் விக்ரமின் மகன் த்ருவ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு
வர்மா படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்றது. மகனுக்கு துணையாக விக்ரமும் நேபாளம் சென்றார். முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு சென்னை திரும்பியது.

சுப்புலட்சுமி
வர்மா படத்தின் ஹீரோயின் யார் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் கவுதமியின் மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
படிப்பு
என் மகள் நடிக்க வருவதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சுப்புலட்சுமி படிப்பில் கவனம் செலுத்துகிறார். தற்போது நடிக்கும் திட்டம் இல்லை. அவரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கவுதமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











