twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்.. சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்.. உருக்கமான பேட்டி!

    சென்னையில் பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ வீட்டினருக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

    |

    Recommended Video

    Kamal Meet Subhasri family : சுபஸ்ரீ குடும்பத்தை சந்தித்த கமல்

    சென்னை: சென்னையில் பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ வீட்டினருக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார்.

    சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ கடந்த வியாழக்கிழமை விபத்தில் பலியானார். சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் பைக்கில் செல்லும் போது மேலே விழுந்து சுபஸ்ரீ விபத்திற்கு உள்ளானார்.

    இந்த நிலையில் ,சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்று மநீம தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர் பேனர் வைத்தவர்கள் மீது கடுமையான புகார்களை வைத்தார்.

    "நோ மீன்ஸ் நோ".. தல சொல்லியும் மக்கள் இன்னும் இதை புரிஞ்சுக்கலையே.. சொந்த அனுபவங்களால் டாப்ஸி வேதனை

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அவர் தனது பேட்டியில், தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். இந்த பெற்றோர்களில் இழப்பிற்கு நான் ஆறுதல் கூட சொல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களின் இழப்பிற்கு நான் என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவர்களின் சோகம் கோபமாக மாற கூடாது. அதனால் அவர்களிடம் தவறாக யாரும் எதுவும் சொல்ல கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

    இல்லை

    இல்லை

    குற்றம் எங்கள் மேல் இல்லை என்று அரசியல்வாதிகள் சொல்வது தவறு. அமைச்சர் அப்படி செய்ய கூடாது. அந்த குடும்பத்தின்வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம். அவர்கள் கொஞ்சம் மனம் தேறி வரட்டும். அதுவரை இவர்கள் மீது எந்த விதமான குற்றமும் சொல்ல கூடாது.

    கூடாது

    கூடாது

    அந்த பெண்ணின் மீது எந்த தவறும் சொல்ல கூடாது. அப்படி சொல்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த பெண்ணை குற்றம் சொல்ல வேண்டாம்.

    பேனர்

    பேனர்

    ஒருநாள் பேனரை எடுத்துவிட்டு நாடகம் நடத்த வேண்டாம். இனியாவது நாட்டில் பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும். இல்லையென்றால் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும். எங்கள் கட்சியில் இருந்து நாங்களும் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

    பேனர் வைக்க கூடாது

    பேனர் வைக்க கூடாது

    நாங்களும் பேனர் வைக்க கூடாது. இதுவரை தவறாக பேனர் வைத்தது இல்லை. இனியும் கூடாது. நடிகர்களும் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.

    எப்படி குற்றம்

    எப்படி குற்றம்

    குற்றத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்று நம்பிக்கை அரசியல் வாதிகளுக்கு இருக்கிறது. அது நடக்காது. மக்கள் இனியும் சும்மா இருக்க மாட்டார்கள். மக்கள் இனியும் குற்றம் செய்பவர்களை விட மாட்டார்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Subhasri Banner Death: Kamal Haasan meets the family members and paid his tribute yesterday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X