twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா.. பேனர் தடை குறித்து எஸ்.வி சேகர் சர்ச்சை!

    |

    Recommended Video

    Banner Banned : பேனர்களுக்கு எதிரான தமிழக அரசு நடவடிக்கை..பொதுமக்கள் வரவேற்பு-வீடியோ

    சென்னையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் அச்சிடும் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று மாநகராட்சி பிறப்பித்த உத்தரவிற்கு நடிகர் எஸ். வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை: சென்னையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் அச்சிடும் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று மாநகராட்சி பிறப்பித்த உத்தரவிற்கு நடிகர் எஸ். வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். அதிமுக கட்சி வைத்த பேனர் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது.

    இந்த வழக்கில் இன்னும் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது.

    சென்னை மாநகராட்சி முடிவு

    சென்னை மாநகராட்சி முடிவு

    இந்த நிலையில் இந்த பிரச்சனையில் துரிதமாக செயல்பட்ட சென்னை மாநகராட்சி, சென்னையில் அனுமதி இன்றி செயல்படும் அச்சகங்கங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் அச்சிடும் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கும் என்று கூறியது.

    ஹைகோர்ட்டில் வழக்கு

    ஹைகோர்ட்டில் வழக்கு

    இதற்கு எதிராக தனியார் நிறுவனம் ஒன்று சென்னை ஹைகோர்டில் வழக்கு தொடுத்தது. மாநகராட்சி உத்தரவு சரியானது கிடையாது. யாரோ வைக்கும் போஸ்டர்களுக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. அதற்கு எங்கள் மீது தடை விதிக்க முடியாது என்று தனியார் பிளக்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

    இடைக்கால தடை விதிப்பு

    இடைக்கால தடை விதிப்பு

    இந்த நிலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் பேனர் அச்சிடும் நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் என்ற உத்தரவிற்கு சென்னை ஹைகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடக்கும் வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று நீதிமன்றம் கூறியது.

    எஸ். வி சேகர் டிவிட்

    இதையடுத்து இந்த தீர்ப்பு குறித்து நடிகர் மற்றும் பாஜக நிர்வாகி எஸ். வி சேகர் டிவிட் செய்துள்ளார். அதில், ''சரியான நடவடிக்கை. முறைப்படுத்துதலுக்கு பதில் ஒரு தொழிலையே முடக்குவது சரியாகாது. யாராவது ஷாக் அடித்து இறந்தால் மின் வாரியத்தை மூடிவிட முடியுமா'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Subhasri Death: Actor S Ve Shekher opposes Corporation banning illegal banners.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X