ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. நடிகருக்கு மேடையில் நச்சுனு முத்தம் கொடுத்த சுப்புரமணியபுரம் நடிகை!

சென்னை: சுப்பிரமணியபுரம் நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், மேடையில் நடிகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சசி குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுவாதி.

subramaniapuram swathi reddy kissed sai dharam tej in month of madhu trailer launch event

அந்த படத்திற்கு பிறகு, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்த படங்களில்: நடிகை சுவாமி நடிகையாக மட்டுமில்லாமல், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவராக இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததை அடுத்து, இந்தோனேசியாவை சேர்ந்த விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவரை பிரிந்தார்: திருமணத்திற்கு பின் இந்தோனேசியாவில் குடியேறிய ஸ்வாதி சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் திரும்பி இருந்தார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவரது கணவர் புகைப்படத்தை நீக்கிவிட்டதால், இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

மந்த் ஆஃப் மது படத்தில்: நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரியாகி இருக்கும் சுவாதி, மந்த் ஆஃப் மது என்கிற படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் நாகோடி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில், நவீன் சந்திரா, ஸ்வாதி, ஸ்ரேயா நவிலே ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது.

கட்டிப்பிடித்து முத்தம்: இதில் பேசிய சாய் தரம் தேஜ், கல்லூரி நாட்களில் இருந்தே ஸ்வாதி என் சிறந்த தோழி. இந்தப் படம் சுவாதிக்கு நல்ல வெற்றியைக் கொடுக்க வேண்டும். ஆல் தி பெஸ்ட் ஸ்வாதி என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த ஸ்வாதி அவரை கட்டிப்பிடித்து மேடையிலேயே முத்தம் கொடுத்தார். சுவாதியின் இந்த செயல் மேடையில் இருந்தவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

தேவையில்லாத கேள்வி: அப்போது செய்தியாளர் ஒருவர் இன்ஸ்டாவில் இருந்து கணவரின் புகைப்படத்தை நீக்கியது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு நான் இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். இது தொடர்பில்லாத கேள்வி, நான் பேசமாட்டேன் என்று கண்டிப்பாக கூறிவிட்டார். ஏற்கனவே விவாகரத்து தொடர்பான சர்ச்சை இருக்கும் நிலையில், பொது இடத்தில் நடிகருக்கு முத்தம் கொடுத்து நடிகை சுவாதி மீண்டும் பேசுபொருளாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X