வெற்றி எந்த வயதிலும் வரும்.. துரந்தர் நடிகருடன் பப்லு பிருத்விராஜ்.. பாலிவுட்டில் தொடர்ந்து கலக்குறாரே!

சென்னை: அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் உடன் நடித்த பப்லு பிருத்விராஜ் தற்போது துரந்தர் பட நடிகருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் கவர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பப்லு அதன் பின்னர் வில்லன் நடிகராக மாறினார்.

அஜித் குமார் உடன் அவள் வருவாளா படத்தில் நடித்த பப்லு தன்னால் அஜித் அளவுக்கு சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை பல முறை வெளிப்படுத்தினாலும், தனது திறமையை வைத்து தற்போது கோலிவுட்டை தாண்டி பாலிவுட் வரை சென்றுள்ளார்.

Success can come at any itme any age Babloo Prithiveeraj congratulates Dhrandhar Rakesh Bedi

முதல் மனைவியை விடுத்து 2வதாக ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி திருமணம் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணும் இவரை விட்டுச் சென்ற நிலையில், அப்செட்டாக இருந்த பப்லு தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகத் தொடங்கி உள்ளார்.

Success can come at any itme any age Babloo Prithiveeraj congratulates Dhrandhar Rakesh Bedi

வெற்றி எந்த வயதிலும் வரும்: துரந்தர் படத்தில் மெகா ஸ்பை ஆக பாகிஸ்தானில் அரசியல்வாதியாக பல ஆண்டுகளாக இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராகேஷ் பேடி நடித்துள்ளார். 40 ஆண்டுகளாக சினிமாவில் நடித்தாலும் இதுவரை எந்தவொரு படத்திற்காகவும் தனக்கு இந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைத்ததே இல்லை என்று தெரிவித்திருந்தார். துரந்தர் 2 பாகங்களிலும் நடிப்பதற்காக 50 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், துரந்தர் 2 திரைப்படம் 1700 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டிய நிலையில், கூடுதலாக 1 கோடி ரூபாய் செக்கை தயாரிப்பாளர் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், வெற்றி எந்த வயதிலும் வரும் என பப்லு பிருத்விராஜ் ராகேஷ் பேடியை புகழ்ந்துள்ளார்.

ராகேஷ் பேடியுடன் நடிக்கும் பப்லு: ஏற்கனவே சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பப்லு பிருத்விராஜ் நடித்திருந்தார். மேலும், விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படத்தில் நடித்திருந்தார். நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தண்டேல் படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது ராகேஷ் பேடி உடன் இந்தி படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் எடுத்துக் கொண்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டு பப்லு பிருத்விராஜ் இப்படியொரு பதிவை பதிவிட்டுள்ளார். பப்லுவின் திறமைக்கும் ஒருநாள் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X