பிகில் தீபாவளி தான்.. சிங்கப்பெண்களை சிகரத்தில் வைத்த பிகில்!

தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியான பிகில் படத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்களை வீட்டில் அடிமைகளாக பார்க்கும் மனோபாவத்தை உடைக்கும் வசனங்களில் அட்லி தனது ஆழமான எழுத்தாற்றலை

Recommended Video

‘Bigil’ movie review | சும்மா வேற லெவல் வெறித்தனம் !

சென்னை: விஜய் ரசிகர்களுக்கு இன்று காலை முதலே தீபாவளி கொண்டாட்டம் தொடங்கி விட்டது.

சிங்கப்பெண்ணே பாடலுக்கு ஆழம் சேர்க்கும் விதமாக பெண்கள் குறித்த வசனங்களும் காட்சிகளும் பிகில் படத்தை சென்டிமென்ட் மாஸ் என்டர்டெயினராக மாற்றியுள்ளது.

பொதுவாக அட்லி படங்களில் சென்டிமென்ட் காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பிகில் படத்தில் அதன் அளவு ஒரு படி உயர்ந்துள்ளது.

சிங்கப்பெண்கள்

சிங்கப்பெண்கள்

பிகில் படத்தின் வெற்றி சிங்கப்பெண்களின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. கருப்பா இருப்பது, குண்டா இருப்பது, திருமணம் ஆகி தாயான பிறகு பெண்கள் வெறும் வீட்டு வேலைக்கு மட்டுமே லாயக்கி போன்ற பல விஷயங்கள் பிகில் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நொறுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகளுக்காகவே பிகில் படம் மிகப்பெரிய வரவேற்பை பெண்கள் மத்தியில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்களில் திருவிழா

தியேட்டர்களில் திருவிழா

கடைசி நேரத்தில் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளிலும் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பித்தது. ரசிகர்கள் இரவு முழுவதும் தியேட்டர் வாசலில் ஆட்டம் பாட்டம் என மேள தாளத்துடன் கொண்டாட்டங்களை நடத்தி பிகில் தீபாவளியை வரவேற்றனர்.

யார் மாஸ்?

யார் மாஸ்?

பிகில், மைக்கேல், ராயப்பன் என மூன்று விதமான கெட்டப்புகளில் இந்த படத்தில் விஜய் நடித்துள்ளார். இதில், ராயப்பன் கதாபாத்திரம், விளையாட்டு குறித்து பேசுவதும், விளையாட்டு தான் நம்ம அடையாளத்தை மாற்றும் என்று கூறுவதும் படத்தில் தெறி மாஸாக அமைந்துள்ளது.

பிகில், மைக்கேல் இருவரும் ஒருவரா இல்லை வேறு வேறு நபரா என்பதை இங்கே லீக் செய்ய விரும்பவில்லை. அந்த ட்விஸ்ட்டை தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், இரு கெட்டப்புகளிலும் விஜய் தனது ஸ்டைலில் கோல் அடித்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

ராஜா ராணி படத்தில் நயன்தாராவை எவ்வளவு அழகாக அட்லி காண்பித்தாரோ அதைவிட இந்த படத்தில் அழகு தேவதையாக நயன்தாரா வருகிறார். ஆனால், ராயப்பன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யை அவர் அப்பா என்று கூறும் இடங்கள் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

எந்த அளவுக்கு படத்தில் மாஸ் காட்சிகள் மூன்று கேரக்டர்களின் இன்ட்ரோ காட்சிகள் ரசிகர்களை குஷி படுத்தினாலும், படத்தின் ஆழமான விஷயம் சென்டிமென்ட் காட்சிகள் தான். இந்த ஆண்டு வெளியான அஜித்தின் நேர்கொண்ட பார்வை பெண்கள் குறித்து பேசியிருந்தது. அதில், பெண்களின் உரிமை குறித்து பேசப்பட்டது. ஆனால், விஜய்யின் பிகில் படத்தில் பெண்களின் முன்னேற்றம் குறித்து உணர்வுப்பூர்மாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் அட்லி பேசியுள்ளார்.

More from Filmibeat

Read more about: bigil பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X