twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊடக நண்பர்களுக்கு நன்றி சொன்ன கோமாளி டீம்

    |

    Recommended Video

    Comali Success Thanks Giving Function Part 2 | Comali | Jayam Ravi | Kajal Agarwal

    சென்னை : பத்திரிகையாளர்களை அன்பு மழையில் நனைய வைத்தது கோமாளி டீம்

    டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்
    ரவி - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடும்
    திரைப்படம் கோமாளி. அக்டோபர் 6ம் தேதி OTT தலமான ஹாட் ஸ்டாரில்
    அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

    success press meet of komali

    கோமாளி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி செலுத்துவதற்காக பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ், அஸ்வின், ஜெயம் ரவி, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், ஆசிரியர் பிரதீப் இ ராகவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோமாளி திரைப்படத்தின் வெற்றியை குறித்து ஜெயம் ரவி
    பேசுகையில் " படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பதையும்
    தாண்டி டாக்டர் ஐசரி கே கணேஷ் ஐயா போன்ற ஒரு உயர்ந்த மனிதருடைய அறிமுகம்
    கிடைத்ததை பெருமையாக நினைக்கிறன். இப்படத்தின் வெற்றியை முன்னிட்டு
    இயக்குனர் பிரதீப் அவர்களுக்கு ஒரு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
    இந்த நிலையில் அவர் பற்றி பலருக்கு தெரியாத ஒரு விஷயம் அவர் எனக்கு
    லிமிடெட் எடிஷன் வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார். இப்படி அவர் செய்யும் பல
    நல்ல விஷயங்களை மக்களுக்கு வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் நல்லது செய்து
    வருகிறார்.

    மேலும் எங்களின் வெற்றியை பாராட்டியும், சரியான விமர்சனங்கள் மூலமும்
    எங்களை ஆதரிக்கும் பத்திரிகையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தனது
    நன்றிகளை தெரிவித்துக்கொண்டார் ஜெயம் ரவி.

    success press meet of komali

    தனி ஒருவன் திரைப்படத்தை தொடர்ந்து கோமாளி திரைப்படத்தில் சிறப்பான இசை
    மூலம் படத்திற்கும் பலம் சேர்த்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. என்னுடைய
    வெற்றி படங்கள் அனைத்திலும் அவரது இசை கட்டாயம் இருக்கும் என்பதால்
    என்னுடைய அடுத்த படத்திலும் ஆதி ஒரு அங்கமாக இருப்பார். பிரதீப் தனது
    அடுத்த ஸ்கிரிப்ட்டை மிகவும் அற்புதமாக அமைக்க வேண்டும் என்பதற்காக
    கடுமையாக உழைத்து வருகிறார். மேலும் எங்களின் ஒவ்வொரு படைப்பிற்கும்
    உறுதுணையாய் இருந்து பாராட்டி மேலும் ஊக்குவித்து எங்களை
    உற்சாகப்படுத்தும் ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் என்றார்
    ஜெயம் ரவி.

    தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்த நிகழ்வில் பேசுகையில் " தமிழ் சினிமா தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சுமார் 150 திரைப்படங்கள் படப்பிடிப்பு நிறைவடைந்து, சென்சார் பணிகளும் முடிவடைந்த பிறகும் வெளியிடப்படாமல் தேங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த இந்த படத்தினை எந்த ஒரு சிக்கலில் சிக்கி கொள்ளாமல் அனைத்து தடைகளையும் தாண்டி கோமாளி திரைப்படத்தை வெளியிட வசதி செய்து கொடுத்த சக்தி திரைப்பட தொழிற்சாலையின் பி. சக்திவேல் அவர்களுக்கு
    எங்களது மனமார்ந்த நன்றிகள். எல்.கே.ஜி, கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து பப்பி திரைப்படம் அக்டோபர் 11 ம் தேதி வெளியாகவுள்ளது. கோமாளி படத்தின் 2 பாகம் எடுக்கும் முயற்சியில் உள்ளோம் ஆனால் அதற்கு இடையில் வேறு ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.

    சக்தி திரைப்பட தொழிற்சாலையின் பி.சக்திவேல் கூறுகையில் " சமீபத்தில்
    வெளியான வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த திரைப்படங்கள் அடுத்தது
    வெற்றிபெற்று வருகிறது,டாக்டர் ஐசரி கே கணேஷ் ஐயாவுடன் பணிபுரிந்த
    அனுபவம் மிகவும் அழகானது, கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திற்கு பிறகு
    கோமாளி திரைப்படம் இன்று வெற்றியை அள்ளி குவித்திருக்கிறது. அடுத்து
    வெளியாகவிருக்கும் பப்பி திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்
    என்றார்.

    ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் கூறுகையில் " நல்லதை நினைத்தாள்
    நல்லதே நடக்கும் என்ற வாக்கியத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
    தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் சார், அஸ்வின் மற்றும் அணியில் உள்ள
    அனைவருமே மிகவும் நல்லவர்களாக இருந்ததால் படம் வெற்றியை பெற்றது. முழு
    அணியும் அளித்த அர்ப்பணிப்பு தான் இதன் வெற்றிக்கு முக்கிய காரணம்.
    பாடல்கள் அனைத்தும் ஆடியோ தரவரிசையில் முதலிடத்தில் இருக்கின்றன என்றார்.
    எனவே இந்த கோமாளி திரைப்படத்தின் வெற்றி ஒட்டு மொத்த குழுவினரையும்
    சேரும் என்றார்.

    இப்படி இனிதாக நடந்து முடிந்தது கோமாளி திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் கூட்டம்.

    English summary
    komali is the movie of an hero who is in COMA for long time - the script tells many memoirs of 90s kids and 2k kids with funny screenplay and serious knots. recently they had the success celebration with media & press.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X