பீஸ்ட் செய்த அரிய சாதனை…தடைகளை உடைத்து உச்சம் தொட்டது!
சென்னை : விஜய் கதாநாயகனாக நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்டு மூன்றாவது நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது
பீஸ்ட் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்க தொழிற்சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பீஸ்ட் திரைப்படம் செய்த ஒரு சாதனையை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கே ஜி எஃப் 2 திரைப்படத்தால் வசூல் குறைந்த பீஸ்ட்
ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டையை தொடர்ந்தது. ஏப்ரல் 14ஆம் தேதி இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கே ஜி எஃப் 2 திரைப்படம் ரிலீஸ் ஆனதும் பிற மாநிலங்களில் பீஸ்ட் படத்தின் வசூலில் சற்று குறைந்ததாக சொல்லப்படுகிறது. கே ஜி எஃப் 2 படத்தின் வருகையால் பிற மாநிலங்களில் பீஸ்ட் படத்திற்கு வரவேற்பு குறைந்தாலும் தமிழ்நாட்டில் முதல் நாள் போலவே வசூலில் சாதனை செய்வது தொடர்கிறது.

முதல் நாள் வசூல் சாதனை
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகி யாக பூஜா ஹெக்டே நடிக்க இயக்குனர் செல்வராகவன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்களோடு யோகி பாபு, கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தொகுப்பாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றியுள்ளார். பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் வசூலில் இதுவரை வேறு எந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனை செய்துள்ளது. இதற்கு முன்னர் முதல் நாள் வசூலில் முதலிடத்தில் இருந்த சர்க்கார் படத்தை வசூலில் அனாயாசமாக மிஞ்சியுள்ளது. சர்க்கார் திரைப்படம் முதல் நாளில 33 கோடி ஷேர் வசூலிக்க பீஸ்ட் 35 ஷேர் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

நெல்சன் ஐ கழுவி ஊற்றும் விஜய் ரசிகர்கள்
பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வண்ணம் படம் இல்லை என்றே சொல்லப்படுகிறது. முதல் காட்சி முடிந்து வெளியே வரும் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தோடு போவதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் ஐ கழுவி ஊற்றுகின்றனர் படத்தின் இந்த நிலைக்கு காரணம் நெல்சன் தான் என குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் அவரை மிகவும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்

100 கோடி
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு எட்டாமல் போனாலும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் இருக்கிறது. தமிழ் சினிமாவில் அனைத்து ரெக்கார்டுகளையும் உடைத்தெறிந்து வருகிறது. இதனிடையில் தமிழ்நாடு திரையரங்கு தொழிற்சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பீஸ்ட் திரைப்படம் கமர்ஷியல் ஹிட் ஆனதாகவும் தமிழ் சினிமாவில் வேகமாக 100 கோடி வசூலைத் தொட்ட முதல் படமாக சாதனை புரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் இதை வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











