twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் !

    |

    Recommended Video

    MR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு

    சென்னை: தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் பலவற்றை கொடுத்த வெற்றி பட இயக்குனர்கள் இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வெற்றிக் கனிப்பறிக்க காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    இயக்குனர் எம்.ராஜேஷ் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இயக்குனர். ராஜேஷ் சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி என அடுத்து அடுத்து காமெடி படங்களை கொடுத்து மிக பெரிய டிரெண்ட் செட்டராக மாறினர். இவரின் படங்கள் மூலம் தான் சந்தானம் மிக பெரிய நாயகனாக மாறினார் என்று கூட சொல்லலாம் .

     Successful directors are not able to succeed today

    அப்படிப்பட்ட இயக்குனரான எம்.ராஜேஷ் அதற்கு பிறகு ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, கடவுள் இருக்கான் குமாரு, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் இவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை தற்போது வெற்றிக்கனியை பறிக்க காத்து இருக்கிறார்.

    இதில் மற்றுமொரு இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு மூலம் இயக்குனரான இவர். அதன் பின் மாபெரும் வெற்றிபடங்களை கொடுத்தார். சரியான திரைக்கதை இருந்தால் சிறு பட்ஜெட் படங்களையும் மாபெரும் வெற்றி அடைய செய்யலாம் என்ற புதிய டிரெண்டை உருவாக்கினார்.

     Successful directors are not able to succeed today

    பாயும் புலி ,மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், வெண்ணிலா கபடி குழு 2, கென்னடி கிளப் மற்றும் சாம்பியன் என தொடர்ந்து தோல்விப்படங்களால் சறுக்கலை சந்தித்துள்ளார். இவரும் சரியான வெற்றிக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான சாம்பியன் படமும் எதிர்பார்த்த அளவு வசூலைத் தரவில்லை என்பது சற்று வருத்தம் தான்.

     Successful directors are not able to succeed today

    இதில் மற்றொரு இயக்குனர் ஏ.எல்.விஜய் இவர் மதராசபட்டிணம் , தெய்வதிருமகள், தலைவா போன்ற வெற்றி மெகா ஹிட் படங்களை தந்தவர். ஆனால், அதற்கு பிறகு இது என்ன மாயம், வனமகன், தியா, லஷ்மி, வாட்ச்மேன் மற்றும் தேவி 2 என தொடர் தோல்வி படங்களையே கொடுத்து வருகிறார். இவர் தற்போது தலைவி படம் மூலம் பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

     Successful directors are not able to succeed today

    தமிழ் சினிமாவின் முன்னணி டிரெண்ட் செட்டர்ஸ் ஆனா பாலசந்தர், பாரதிராஜா,பாலுமகேந்திரா, மஹேந்திரன் போன்றவர்களுக்குமே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. அவர்களும் மிக பெரிய டிரெண்டை உருவாக்கி அதன் பின் தொடர் தோல்வி படங்களின் மூலம் படம் இயக்குவதை நிறுத்தி இருக்கின்றனர். ஆனால் ஹாலிவுட்டில் இன்றும் 70வயதில் சிறந்த இயக்குனர்கள் பணியாற்றி வருகின்றனர் இதை போல தமிழ் சினிமாவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Successful directors are not able to succeed today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X