மறக்க முடியுமா? பராசக்தி வசனத்தை.. என்றும் காலத்தால் அழியாத கலைஞர் கருணாநிதி!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 100வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியலில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்த கருணாநிதிக்கு, ராஜபாதை அமைத்து கொடுத்து வீர நடை போடவைத்தது சினிமா தான்.

அரசியல் களத்தையும் தாண்டி தமிழ் சினிமாவில் கலைஞரின் வசனங்கள் கர்ஜித்தன. அவரின் திரைப்படம் குறித்து ஒர் பார்வை.

முத்துவேல் கருணாநிதி : தட்சிணாமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட முத்துவேல் கருணாநிதி. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்தார். முத்துவேல், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த கருணாநிதி, பள்ளியில் படிக்கும் போதே, தமிழிலும், இலக்கியத்திலும், நாடகத்திலும் நாட்டம் கொண்டவராக இருந்தார்.

இளைஞர் மறுமலர்ச்சி : பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் கவரப்பட்ட கருணாநிதி, தனது, 14 வயதிலேயே மாணவர்கள் சிலரது உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை தொடங்கினார். இது நாளடைவில், மாநில அளவிலான மாணவர்களின் கழகம் என்ற அமைப்பாக உருவானது.

ராஜகுமாரி : நாடகத்தின் மீது ஆர்வம் கொண்ட கருணாநிதி, முதன்முதலாக ராஜகுமாரி என்ற படத்திற்கு வசனம் எழுதினார். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான இப்படத்தின் வசனங்கள் இடிமுழக்கம் போல திரையில் முழங்கின. இப்படம் எம்ஜிஆரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Successful movies with Kalaignar Karunanidhi dialogue

பராசக்தி : அதே போல, நடிகர் சிவாஜி கணேசனை இன்றளவும் திரையுலகம் உலகம் கொண்டாடக்கூடிய நடிகராக்கியது பராசக்தி திரைப்படம் தான். அந்த படத்தில், தீண்டாமை, விதவைகள், சுய மரியாதைத் திருமணம் அனைத்து பிரச்சனைகள் குறித்து, தனது பேனாவை கூறிய வாளாக சீவி வசனத்தால், மூடர்களின் மூளையை பதம் பார்த்து இருப்பார்.

அடுத்தடுத்த படங்களில் : அதனைத் தொடர்ந்து பல படங்கள் கருணாநிதி கதை, வசனங்களுக்காகவே ஓட ஆரம்பித்தன. மக்களும் அவரது வசனத்தை கைதட்டி வரவேற்றனர். அதன் பின் நாம், மனோகரா, மலைக்கள்ளன், எல்லாரும் இந்நாட்டின் மன்னர், அரசிளங்குமரி, இருவர் உள்ளம், காஞ்சித்தலைவன், பூம்புகார், மணிமகுடம் படங்களின் வசனங்களும் வரவேற்பைப் பெற்றன.

Successful movies with Kalaignar Karunanidhi dialogue

பொன்னர் சங்கர் : பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் தமிழக முதலமைச்சரான கருணாநிதி, திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதை கருணாநிதி குறைத்துக்கொண்டார். இவர் கடைசியாக 2011ம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான பொன்னர் சங்கர் படத்துக்குக் கதை, வசனம் எழுதியிருந்தார். சமத்துவம், பெண்ணுரிமை, திராவிட கொள்கைகள் உள்ளிட்டவைதான் கருணாநிதியின் திரை வசனங்களில் அனலை கக்கின. இவர் இன்று மறைந்து இருந்தாலும், படத்தில் அவர் கர்ஜித்த வசனம் சிங்கம் போல என்றும் கர்ஜித்துக்கொண்டே இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X