பாலாஜியை ஏற்றிவிட்ட விவகாரம்.. ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்.. கேபியிடம் பகீரங்க மன்னிப்பு கேட்ட சுச்சி!
சென்னை: ஹானஸ்ட்டியை பற்றி பேசியதாக பாலாஜியை ஏற்றிவிட்ட விவகாரத்தில் கமல் முன்பு கேபியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் சுச்சி.
Recommended Video

பிக்பஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கின் போது, கேபி ஹானஸ்ட்டா பதில் சொல்லு என்று பாலாஜியிடம் கூறியதை அவருடைய ஹானஸ்ட்டியை பத்தி பேசியதாக திரித்து கூறினார் சுச்சி.
இதனால் செம டென்ஷனான பாலாஜி, கேபி மற்றும் சக ஹவுஸ்மெட்ஸ்களை அவனே இவனே என விளாசி விட்டார்.

ஒத்துக்கொண்ட சுச்சி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த விவகாரம் குறித்து விசாரித்தார் கமல். அப்போது பேசிய சுச்சி, அந்த விஷயத்தில் நான் கண்டிப்பாக ஓவர் ரியாக்ட் செய்துவிட்டேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன் என்றார்.

மன்னிப்பு கேட்ட சுச்சி
மேலும் அதற்காக கேபியிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஷிவானி சொன்ன வார்த்தையை கேட்டு அப்படி செய்துவிட்டேன். ட்ரிகர் செய்யணும் என்றில்லை. அவருக்கு ஆதரவாய் பேசினேன். ஆரம்பத்தில் இருந்த நேர்மையாக விளையாடும் ஒரு போட்டியாளர் பாலாஜி.

பத்திரத்தை திருடியாதாக?
அவரிடம் இல்லாத குணத்தை இருக்கு என்று சொன்னதால் எனக்கு கோபம் வந்துவிட்டது என்றார். சுச்சி சொன்னதை கேட்ட கமல், ரியோவும் நிஷாவும்தான் பத்திரத்தை திருடியதாக பாலாஜியிடம் உறுதியாக சொன்னீர்களே எப்படி என்றார்.

காமெடி பண்ணாதீங்க
அதற்கு பதில் சொன்ன சுச்சி, நிஷாவும் ரியோவும் அதனை எட்டி எட்டி பார்த்தார்கள் அதனை நான் ஓரக்கண்ணால் பார்த்தேன். அதனால் இருக்குமோ என காமெடியாக சொன்னேன் என்றார். அதனைக் கேட்ட கமல் இந்த காமெடியெல்லாம் பண்ணாதீங்க என்று கூறியதோடு, பாலாஜி இதில் இருந்து என்ன புரிகிறது என்றும் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினார்.


Click it and Unblock the Notifications