ஏதோ பிரச்சனை.. எப்படி இருந்த சுச்சி இப்படி ஆயிட்டாங்களே.. புலம்பலை பார்த்து ச்சு கொட்டும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுச்சி வாயக்கு வந்தப்படி ஏதேதோ பேசி புலம்புவதை பாரத்த ரசிகர்கள் அவருக்கு என்ன பிரச்சனை என கேட்டு வருகின்றனர்.

பிரபல பாடகி, ஆர்ஜே, நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. சுச்சி லீக்ஸ் பிரச்சனையில் இருந்தே அவர் குறித்து அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சுச்சி.

ஓவர் எமோஷ்னல்

ஓவர் எமோஷ்னல்

இதில் அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை என கூறி ஹவுஸ்மெட்ஸ் அவரை நாமினேஷன் செய்து வருகின்றனர்.
அதற்கு ஏற்றது போலவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக நடந்து வருகிறார். திடீரென ஓவர் எமோஷ்னல் ஆகும் சுச்சி, பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறார்.

சுச்சிக்கு என்ன ஆனது?

சுச்சிக்கு என்ன ஆனது?

நேற்று முன்தினம் எபிசோடில் தனியாக பிக்பாஸிடம் பேசிய அவர், மற்ற ஹவுஸ்மெட்ஸ்களை பார்த்து திடீரென சிரித்தார், கோபப்பட்டார், திட்டினார். அதனை பார்த்தே ஹவுஸ்மெட்ஸ் சுச்சிக்கு என்ன ஆனது என பரிதாப்பட்டனர்.

வெளி உலகம் பெட்டர்

வெளி உலகம் பெட்டர்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில், பாத்ரூம் ஏரியாவில் விடியற் காலையிலேயே தனியாக நின்று பேச தொடங்கிவிட்டார். இதைவிட வெளி உலகம் பெட்டரா இருக்கும் பிக்பாஸ். ஃபேக்கா சிரிச்சு, ஃபேக்கா அழுது இப்படியெல்லாம் நடிச்சு இருக்கணும்னு அவசியமே இல்ல பிக்பாஸ் என புலம்பினார்.

உன்ன வச்சுதான் விளையாடுறாங்க

உன்ன வச்சுதான் விளையாடுறாங்க

மேலும் பாலா இவ்ளோ மரமண்டையா இருப்பானா. என்கிட்ட கேட்குறாங்க ஏன் எல்லாரும் என்னை வச்சு செய்யுறாங்க என்றான். நீ அவங்களுக்கு எதிரா ஸ்டண்ட் பண்ணனும்னு சொன்னேன். உன்னை வச்சுதான் இங்க எல்லாரும் விளையாடுறாங்க என்றேன்.

ஜெயிலுக்கு அனுப்ப போகிறார்கள்

ஜெயிலுக்கு அனுப்ப போகிறார்கள்

எல்லாத்தையும் கேட்டுவிட்டு அரை மணி நேரம் கழித்து வந்து உன்னாலதான் வீடு டஸ்ட் ஆயிடுச்சு, அதனால லக்ஸரி பட்ஜெட் போய்விடும். ஆகையால் உன்னதான் இந்த வாரம் ஜெயிலுக்கு அனுப்ப போகிறார்கள் என்றும் சொல்கிறான். அதையெல்லம் கேட்டு என்னால் ரியாக்ட் கூட பண்ண முடியவில் என்று கூறிய அவர் முக்காவாசி நேரம்.. என்ற பாடலை பாடினார்.

வித்தியாசமாக நடக்கும் சுச்சி

வித்தியாசமாக நடக்கும் சுச்சி

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பு குவாரண்டைனில் இருந்த ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி அலறியடிடித்து ஓடியதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலும் சுச்சி வித்தியாசமாக நடந்துகொள்கிறார்.

எவ்ளோ கொடியது?

இதனை பார்த்த ரசிகர்கள் சுச்சிக்கு என்ன ஆச்சு, அவரை சீக்கிரம் வெளியே அனுப்புவதுதான் நல்லது என கூறி வருகின்றனர். பலரும் சுச்சி நார்மலாக இல்லை என்று கூறி வருகின்றனர். சுச்சியின் பிஹேவிங்கை பார்த்த இந்த நெட்டிசன், மணிரத்னம் படத்துல நடிக்கிற அளவுக்கு இருந்த ஒருத்தருக்கு இப்படி ஒரு நிலை...காலம் தான் எவ்ளோ கொடியது...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X