கேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அளித்த கதர் ஆடை குறித்து மோசமாய் விமர்சித்துள்ளார் சுச்சி.

பிரபல ஆர்ஜே, நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகி என பல்வேறு முகங்களை கொண்டவர் சுச்சி.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார்.

ஹேக் செய்துவிட்டனர்

ஹேக் செய்துவிட்டனர்

சுச்சியின் இந்த செயல்பாடு தமிழ் திரைத்துறையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின்னர் தனது சமூக வலைதள கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாக கூறினார்.

சமையல் கலை

சமையல் கலை

அதனை தொடர்ந்து திரைத்துறையில் இருந்தே ஓரங்கட்டப்பட்டார் சுச்சி. அதன் தொடர்ச்சியாக அவரது கணவரான நடிகர் கார்த்திக்கும் அவரை விவாகரத்து செய்தார். வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த சுச்சி வெளிநாட்டில் சமையல் கலை தொடர்பான கோர்ஸை முடித்தார்.

பிக்பாஸ் சீசன் 4

பிக்பாஸ் சீசன் 4

பின்னர் சமையலுக்கான யூட்யூப் சேனலை தொடங்கியுள்ள அவர், தொடர்ந்து சமையல் ரெசிப்பிக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சுச்சி.

பாலாவே கதி..

பாலாவே கதி..

ஆரம்பத்தில் அதிரடி காட்டிய சுச்சி, பின்னர் பாலாஜியே கதி என ஆனார். இதனால் இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகும் பாலாஜிக்கே ஆதரவாக பேசி வந்தார். சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவாய் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

கதர் ஆடை குறித்து விமர்சனம்

கதர் ஆடை குறித்து விமர்சனம்

இந்நிலையில் பிக்பாஸ் ஃபினாலேவில் கமல், கதர் ஆடைகளுக்கான பிராண்டை தொடங்கியது குறித்தும், தனக்கு வழங்கப்பட்ட ஆடை குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் மோசமாய் விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்தார் சுச்சி.

கேவலமான ரசனை

கேவலமான ரசனை

அதாவது, கமல்ஹாசன் கொடுத்த துணி கதர் இல்லை என்றும் அதுவொரு சிந்தடிக் துணி என்றும் கமல்ஹாசனின் முட்டாள்தனமான பிராண்ட் மற்றும் கேவலமான ரசனையுடன் கூடிய டிசைன் தனக்கு கொடுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார். சிந்தடிக் என தெரிந்தும் அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.

நெட்டிசன் கேள்வி

நெட்டிசன் கேள்வி

மேலும் இந்த ஹவுஸ் ஆப் கதர் நிறுவனத்திற்காக அவர் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் விமர்சித்திருந்தார் சுச்சி. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் ஹவுஸ் ஆஃப் கதர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுச்சியின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அவரே கேட்டார்..

அவரே கேட்டார்..

நெட்டிசனின் கேள்விக்கு பதிலளித்த ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனம், சுசித்ராவுக்காக தயாரிக்கப்பட்ட பேண்ட்டின் துணி நெசவாளரிடமிருந்து வாங்கப்பட்டு, சாயமிடப்பட்டு அவருக்காக தைக்கப்பட்டது. அவருடைய சட்டை எச் & எம் நிறுவனத்திடமிருந்து அவர் கோரியபடி இருந்தது. நாங்கள் சிந்தடிக் துணிகளைக் கையாள்வதில்லை என தெரிவித்தது.

கொடுத்திருக்கக் கூடாது..

கொடுத்திருக்கக் கூடாது..

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் செய்த பெரிய தவறே சுச்சிக்கு ஆடை கொடுத்ததுதான். அவருக்கு நீங்கள் டிரெஸே கொடுத்திருக்கக்கூடாது, ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பெரிய புதிய வதந்தியை அவர் உருவாக்குகிறார் என்பதை நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம் என கூறி வருகின்றனர்.

Recommended Video

பிரிந்து போக இது காதல் இல்லை! Aariக்கு Nisha வாழ்த்துக்கள் - Filmibeat Tamil
விலை என்ன?

விலை என்ன?

மேலும் சுச்சி, ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்திற்கு எதிராய் பொய் சொல்கிறார் என்றும் விளாசி வருகின்றனர். இருப்பினும் பலரும் கதர் ஆடைகளின் விலைகளை கூறுங்கள், நடுத்தர மக்களும் வாங்கும் வகையில் அவை இருக்குமா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X