வந்ததும் வராததுமாய் சுச்சி செய்த வேலை.. என்ன இப்படி போட்டு உடைச்சுட்டாங்க.. அலர்ட் ஆயிடுவாங்களே!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்துள்ள சுசித்ரா வந்ததும் வராததுமாய் ஹவுஸ்மேட்டுகளுக்கு அர்ச்சனாவை போல் பட்டம் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாய் நடிகை ரேகா எவிக்ட்டானார்.
கடந்த வாரம் ஆஜித் எவிக்ட்டான நிலையில் அவரிடம் இருந்த ஃபிரி எவிக்ஷன் பாஸை பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டிலேயே தொடர்ந்தார்.

சுசித்ரா என்ட்ரி
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வேல் முருகன் வெளியேறினார். அவர் வெளியே போனதை தொடர்ந்து மேலும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரியாக பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

டண்டனக்கா பாடல்
சுசித்ராவின் என்ட்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய இரண்டாவது புரமோவில் தெரியவந்தது. இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் வீட்டுக்குள் சென்றதும் அவருக்கு ஹவுஸ்மேட்ஸ் வரவேற்பு கொடுத்ததையும் காட்டினர்.

ஹக் என்றால் கேபி
அதில் அர்ச்சனா ஸ்டைலில் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஈமோஜி டிசைனில் பட்டம் கொடுத்தார். அதன்படி
குறும்புத்தனம் இருக்கு என ரமேஷுக்கு ஒரு ஈமோஜியை கொடுத்தார். அடுத்து ஹக் என்றால் கேபிதான் என அவருக்கு அதற்கான ஈமோஜியை கொடுத்தார்.

திறமையான போட்டியாளர்
தொடர்ந்து அனிதாவுக்கு திறமையான போட்டியாளர் எல்லோருடனும் அன்பாக பேச வேண்டும் என்ற ஈமோஜியை கொடுத்தார். சனம் ஷெட்டிக்கு ஷை ஸ்மைல் ஈமோஜியை கொடுத்தார். பாலாவுக்கு கூல் ஸ்மைலி ஈமோஜியை கொடுத்த சுச்சி, உங்களிடம் இருப்பது அரோகேன்ஸ் இல்லை கான்ஃபிடன்ஸ் என்றார்.

காயம்பட்ட கமாண்டோ
சுரேஷ் சக்கரவர்த்திக்கு பேண்டேஜ் ஒட்டப்பட்ட ஈமோஜியை கொடுத்த சுச்சித்ரா காயம்பட்ட கமாண்டோ போன்று இருக்கிறீர்கள் சீக்கிரம் பழைய ஃபார்முக்கு வாருங்கள் என்றார். அடுத்து ரியோவுக்கு தேடல் ஈமோஜியை கொடுத்த சுச்சி, என்ன தேடல்ல இருக்காருன்னு தெரியல என்றார்.

பதிலே தெரியலன்னா ஷிவானி
மேலும் நிஷாவுக்கு லாஃபிங் ஸ்மைலி ஈமோஜியையும் ரம்யாவுக்கு சைலன்ட் கில்லர் ஈமோஜியையும் கொடுத்தார் சுச்சி. தொடர்ந்து ஷிவானிக்கு ஈமோஜியை கொடுக்கும் சுச்சி, ஆர்க்யூமென்டுக்கு பதிலே தெரியலன்னா ஷிவானி என்று அர்த்தம் என்கிறார்.

பேச விடுவதில்லை
சோம் சேகருக்கு வெளியே வர வேண்டும் என்ற ஈமோஜியையும், ஆஜித்துக்கு குழப்பமாக இருக்கும் ஈமோஜியையும் கொடுத்தார். அர்ச்சனாவுக்கும் ஒரு ஈமோஜியை கொடுத்த சுச்சி, மற்றவர்களை பேசவே விடுவதேயில்லை என்றார். ஆரிக்கு உங்கள் கண் எதிரில் ஒரு அநியாயம் நடந்தால் சும்மா இருக்கமாட்டீங்க என்று கூறி ஈமோஜியை கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











