சர்ச்சை நாயகி.. டாப் ஹீரோக்களுக்கு தலைவலி கொடுக்கும் சுசித்ரா பிறந்த நாள் இன்று!

சென்னை: தமிழ் சினிமாவில் கிசு கிசு பேசுபவர்கள் பலர் இருந்தாலும், கிசுகிசு பேசுவேன், என்னால் கிசுசிசு பேசாமல் இருக்க முடியாது என தான் நடத்தி வரும் யூட்யூப் சேனலில் நேரடியாகவே கூறியவர் பின்னணி பாடகி சுசுத்ரா. இவர் இன்றைக்கு அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி தனது, 42வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். அவர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

சுசித்ரா பின்னணி பாடகியாக உருவாவதற்கு முன்னர் தொடக்கத்தில் தனியார் வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றினார். அங்கு அவரது நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இவரது கனீர் குரல் தமிழ் சினிமாவில் அன்றைக்கு பாடிக்கொண்டு இருந்த பாடகிகளுக்கு இல்லாமல் இருந்தது. மிகவும் போல்டான வாய்ஸில் பாடல் பாடவேண்டும் என்றால் கூட, அதுவரை மெல்லிசையில் பாடிக்கொண்டு இருந்த பாடகிகளையே கொஞ்சம் மாற்றி பாடவைத்துக் கொண்டு இருந்தனர். இல்லை என்றால் வேறு மொழிகளில் பாடிக்கொண்டு இருந்த பாடகிகளை தமிழில் பாடவைத்துக்கொண்டு இருந்தனர்.

Suchitra Suchi Leaks

ஆனால் பாடகி சுசுத்ரா முதன் முதலில் பாடிய பாடல் என்றால் அது லேசா லேசா படத்தில் இடம் பெற்றுள்ள எனைத் தேடும் காற்று பாடல்தான். அதன்பின்னர், பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். சினிமா உலகில் சுசுத்ரா ஒரு பாடலைப் பாடுகின்றார் என்றாலே, அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்தான் என அனைவரும் பாராட்டும் அளவிற்கு தனக்கான அங்கீகாரத்தை உருவாக்கி வைத்திருந்தார். தமன்னா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

சுசி லீக்ஸ்: தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சில ஏற்ற இறங்கங்களால் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கின்றார். அதாவது சினிமாவில் பாடல்கள் பாடுவதில் இருந்து விலகி இருகின்றார். ஆனால் சுசுத்ரா பாடகியாக மட்டும் அறியப்பட்டவர் இல்லை. சுசி லீக்ஸ் என தமிழ் சினிமா ரசிகர்களை மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவரும் இவர்தான். நடிகர் நடிகைகளின் இரவு நேர பார்ட்டிகளில் அவர்கள் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

கிசுகிசு: அதன் பின்னர் மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டாரா அல்லது ஒதுங்கிக்கொண்டாரா என யோசிக்க வைக்கும் அளவிற்கு அவரது சினிமா வாழ்க்கை அமைந்துள்ளது என பலர் பேசி வருகின்றனர். ஆனாலும் சினிமாவில் திரை மறைவில் நடக்கும் பல விஷயங்களை தனது யூட்யூப் சேனல் மூலம் வெளிக்கொண்டு வருபவராக உள்ளார்.

Suchitra Suchi Leaks

குற்றச்சாட்டு: முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக உள்ள விஜய், தனுஷ், த்ரிஷா உள்ளிடோர் குறித்து நேரடியாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார். இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்காமல், அல்லது சுசித்ராவுக்கு எதிராக வழக்கு தொடுக்காமல், விஜய், தனுஷ் தங்களது படத்தின் ஆடியோ வெளியீடு உள்ளிட்ட மேடைகளில் பதில் அளித்து வருகின்றனர். நடிகர்களின் இந்த நடவடிக்கையால் சுசித்ரா கூறுவது உண்மையோ என பலரையும் யோசிக்க வைக்கின்றது.

என்னதான், சுசித்ரா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பாடகி இன்னும் தென்னிந்திய சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களைப் பாடவேண்டும் என அவரது பிறந்த நாளில் ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X