தப்பு தப்பா போடுறாங்க..இனி பேட்டி கொடுக்க மாட்டேன்.. நடுராத்திரியில் வீடியோ போட்ட சுசித்ரா!

சென்னை: பாடகி சுசித்ராவின் பேட்டி இணையத்தில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யூடியூப் சேனல்கள் தப்பு தப்பாக தலைப்பு போடுகிறார்கள், இதனால், இனி யூடியூப் சேனலுக்கு பேட்டி தரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

இணையத்தில் எந்த பக்கம் சென்றாலும், பாடகி சுசித்ரா பேசியது, பூதாகரமாக பேசப்பட்டு வருகிறது. அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த சுசித்ரா, தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், இது எனக்கு திருமணமான இரண்டு ஆண்டுகளில் தெரிந்து விட்டது என்றும், ஆனால் இது எங்கள் தாய் தந்தையர்கள் சேர்ந்து நடத்தி வைத்து திருமணம் என்பதால் தான் பொறுமையாக இருந்தாகவும், மேலும், தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் ஒரு அறையில் பல மணி நேரம் ஒன்றாக இருந்ததாகவும் பேசி இருந்தார்.

Suchi Leaks Suchitra latest video trending on social media

பாடகி சுசித்ரா பேட்டி: அது மட்டுமில்லாமல் சுசி லீக்ஸ் என்பது ஒரு ப்ராங் தான், இதில் தேவையே இல்லாமல் என்னை, கார்த்திக் குமார் மாட்டிவிட்டார் என்றார். அதுமட்டுமில்லாமல், பயில்வான் ரங்கநாதன் படுமோசமான நபர்,அவர் பத்திரிக்கையாளரே இல்லை,அவர் பிட்டு படத்திற்கு ஏஜெண்டாக செயல்பட்டார் என்று அடுக்கடுக்கான புகாரை கூறி இணையத்தையே கதிகலங்க வைத்தார். ஒரே பேட்டியில் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,கார்த்திக்குமார், த்ரிஷா, பயில்வான் என ஒட்டுமொத்த கோலிவுட்டை வம்புக்கு இழுத்த சுசித்ரா, இரண்டாவது பேட்டியில் ஷாருக்கான், கரன் ஜோகரையும் சீண்டினார்.

பேட்டி கொடுக்க மாட்டேன்: இவரின் இந்த பேட்டி இணையத்தில் மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், பாடகி சுசித்ரா,தனத யூடியூப் சேனலில் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மற்ற யூடியூப் சேனல்கள் என் பர்ஷனல் விஷயத்தை பற்றி பேசுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வீவ்ஸ் வராங்க, காசு வருது இதனால், தம்லைன்ல கண்டபடி போடுறாங்க. Suchitra raped Dhanush, Suchitra Raped Anirudh அப்படி போட்டுவிட்டு, இதற்கு ஒரு காரணத்தை சொல்லுறாங்க. இதனால், இனிமேல் நான் பேட்டி கொடுப்பதாக இருந்தால், டிவி சேனலுக்குத்தான் பேட்டி கொடுப்பேன், எந்த யூடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுக்கமாட்டேன்.

சேனலை விட்டு போகாதீங்க: பயில்வானுக்கும் எனக்கும் நடக்கும் சண்டையை நீங்க நல்லா ரசித்து பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்ற தெரியும், பாருங்க. ஆனால், அவர் என்னை முகத்தை பற்றி விமர்சித்து பேசி இருக்கிறார். 50 வயது ஆன பெண்ணிற்கு இப்படித்தான் முகம் இருக்கும்,வேண்டுமானால் எனக்கு அழகு குறிப்பு ஒன்று சொல்லுங்கள். என் சேனலில், மட்டும் தான் பேசுவேன், அதில் தனுஷ் பற்றியோ கார்த்திக் குமார், பயில்வான் ரங்கநாதன் பற்றி இருக்காது. திரைப்பட விமர்சனத்தை பற்றி பேசலாம், மற்ற சேனலில் என்னை பற்றி பேசினால், அதற்கு போய் சண்டை போட்டுக்கொண்டு இருக்காதீங்க என்ற சுசித்ரா, உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் என் சேனலை விட்டு போய்விடாதீர்கள் என்று ரசிகர்களிடம் கொஞ்சினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X