அவங்களையும் காணோமா? ஒரு வழியாய் வழியனுப்பி வைத்த ஹவுஸ்மேட்ஸ்.. மூன்றாவது புரமோவ பாத்தீங்களா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இதில் முதல் நாள் முதல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களிடம் உங்களின் பங்களிப்பு என்ன என்று கேட்டு உரையாடுகிறார் கமல்.
இதில் பாலாஜி மற்றும் சோம சேகர் ஆகியோர் பேசும் காட்சிகள் முதல் இரண்டு புரமோக்களின் மூலம் தெரியவந்துள் ளது.

மூன்றில் ஒருவர்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது. நேற்றே ஆரியும் ரியோவும் காப்பாற்றப்பட்ட நிலையில் எவிக்ஷன் லிஸ்ட்டில் எஞ்சியுள்ள மூன்று பேரில் ஒருவர் வெளியேற்றப்பட உள்ளார்.

பாலாவால் அதிர்ச்சியான சுச்சி
இந்நிலையில் எஞ்சியுள்ள மூன்று பேரில் யாரை தங்க வைக்கப் விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார் கமல். அதற்கு முதல் ஆளாய் பதில் சொல்லும் பாலா, கண்டிப்பா சம்யுக்தாதான் என்கிறார். பாலா தனக்கு சப்போர்ட் பண்ணாததை நினைத்து அதிர்ச்சி அடைகிறார் சுச்சி.

கலெக்ட்டிங் ஃபேன்ஸ்
தொடர்ந்து நிஷா, அர்ச்சனா, சோம், ரியோ ஆகியோரும் சம்யுக்தாதான் தங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனைக் கேட்ட கமல், சம்யுக்தா நீங்கள் ரசிகர்களை சேகரிக்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்.

கார்டில் யார் பெயர்?
ஆனால் அதேநேரத்தில் அனிதாவின் முகமும் சோகத்தில் அப்படியே மாறுகிறது. அவரை சனம் ஷெட்டி தேற்றுகிறார். தொடர்ந்து தனது கையில் இருக்கும் கார்டில் யாருடைய பெயர் இருக்கிறது என்று பார்ப்போம் என கூறுகிறார் கமல்,

அனிதா இல்லையா?
அடுத்த ஷாட்டாக பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளரை ஹவுஸ்மேட்ஸ் வழியனுப்பி வைத்து விட்டு வரும் காட்சி காட்டப்படுகிறது. இதில் சுச்சி மற்றும் அனிதா ஆகியோர் மிஸ்ஸிங். சுச்சிதான் வெளியேறியுள்ளார் என்பது
உறுதியானாலும் அனிதா சம்பத் இல்லாததை போல் காட்டி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளார் எடிட்டர்.
எடிட்டர் டிவிட்ஸ்ட்
ஆனால் அனிதா சம்பத், ஆரியுடன் பேசியப்படியே பாலாஜியின் பின்னால் மறைந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், எடிட்டர் டிவிட்ஸ்ட் வைக்கிறாராம் என கலாய்த்து வருகின்றனர். மேலும் சுச்சி ஏற்கனவே
வெளியேறிவிட்டார் என்பது எங்களுக்கு தெரியும் என்றும் கூறி பல்ப் கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











