Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 3 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 4 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 4 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலாஜி ஷிவானி காதல்.. இன்ஸ்டாவில் அதிரடியாய் பதிவிட்ட சுச்சி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஜோடி புறாக்களாக வலம் வரும் பாலாஜி மற்றும் ஷிவானிக்கு இடையேயான காதல் குறித்து சுச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் பிரபல பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா.
மூன்று வாரங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருந்த சுச்சி, கடந்த வாரம் முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்தார்.

கமலிடம் ரிவ்யூ
நாமினேஷனில் இடம்பெற்ற முதல் முறையிலேயே அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுச்சி கமலிடம் ஹவுஸ்மேட்ஸ் குறித்து பக்கா ரிவ்யூ கொடுத்தார்.

கைப்பாவை
நிஷா முழுக்க முழுக்க ஃபேக்காக இருக்கிறார். அனிதா சம்பத் உண்மை ரேடார், ஆரி நேர்மை ரேடார், சனம் ஸ்வீட் பர்சன், சோம் ஒரு கைப்பாவை என ஒவ்வொருவர் குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார் சுச்சி.

ஷிவானிக்கு பிடிக்கவில்லை
மேலும் பாலாஜியை தன்னுடைய க்ரைம் பார்ட்னர் என்றும் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும் கூறினார் சுச்சி. அதேநேரத்தில் ஷிவானிக்கு தனக்கும் பாலாஜிக்கும் இடையேயான நட்பு பிடிக்கவில்லை என்றும், இதனால் அவருடன் நெருங்கி பழக முடியவில்லை என்றும் கூறினர்.

பரிந்துறையில்
பிக்பாஸ் வீட்டில் இருந்தவரை சுச்சி பாலாஜி மீது அதீத அன்பு கொண்டிருந்தார். ஆனால் அவர் ஸ்டேபிளாக இல்லை என்பதால் ஹவுஸ்மேட்ஸ்களின் பரிந்துறையின் அடிப்படையில் சுச்சி வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.

மீண்டும் ஆக்டிவ்
ஆனால் ஹவுஸ்மேட்ஸ் குறித்த அவரின் ரிவ்யூ வேற லெவலில் இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சுச்சி, மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகிவிட்டார். பிக்பாஸ் குறித்து தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

காதல் ரகசியம்
இந்நிலையில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையிலான காதல் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுச்சி. அதாவது, காதல் கண்ணை மறைக்குது என ஆரி கூறியது குறித்து விளக்கம் அளித்த பாலாஜி, இங்க யாரும் லவ் பண்ணல என்றார்.

சுச்சி ஷேர் செய்த மீம்
இதுதொடர்பான மீமை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ள சுச்சி, சூப்பர் என கைகளை தட்டி பதில் தெரிவித்துள்ளார். பாலாஜியே தனக்கு ஷிவானி மீது காதல் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார் சுச்சி.

பாலாஜி கோபம்
பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் இருந்த போதுக் கூட, ஷிவானியை உன் ஆளு என்னை முறைக்குது என்று பாலாஜியிடம் கூறினார் சுச்சி. இதனால் கடுப்பான பாலாஜி, ஷிவானியை என் ஆள் என்று எப்படி சொல்லலாம் என சுச்சியிடம் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.