For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் முன்னாள் மனைவி பற்றி உங்களுக்கு தெரியாது.. சுச்சி குறித்து உருக்கமாக பதிலளித்த கார்த்திக்!

  |

  சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சுச்சி குறித்து அவரது முன்னாள் கணவரான கார்த்திக் ரசிகரின் கேள்விக்கு அளித்த உருக்கமான பதில் வைரலாகி வருகிறது.

  ஆர்ஜே, பாடகி, தொகுப்பாளினி, நடிகை என பல்வேறு முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது தனித்துவமான குரலுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் உண்டு.

  இந்நிலையில் இவரது டிவிட்டர் கணக்கில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் முன்னணி சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியானது.

  ஹேக் செய்துவிட்டனர்

  ஹேக் செய்துவிட்டனர்

  இது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பெரும் சர்ச்சைக்கு ஆளானார் சுசித்ரா. இதனை தொடர்ந்து தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறினார்.

  சுச்சி விவாகரத்து

  சுச்சி விவாகரத்து

  அவரது கணவரான நடிகர் காத்திக், சுச்சிக்கு மனநிலை சரியில்லை என கூறி வீடியோ வெளியிட்டார். மேலும் தனது மனைவியான சுச்சியை விவாகரத்தும் செய்துவிட்டார் நடிகர் கார்த்திக் குமார்.

  ஓரங்கட்டப்பட்ட சுச்சி

  ஓரங்கட்டப்பட்ட சுச்சி

  தெடர்ந்து நண்பர்களால் ஒதுக்கப்பட்ட சுசித்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் வெளியில் தலைக்காட்ட தொடங்கினார். யூடியூப் சேனல் தொடங்கியுள்ள சுச்சி, சமையல் ரெசிப்பிக்களை கூறி வருகிறார். முன்னணி எஃப்எம்மிலும் ஆர்ஜேவாக பணியாற்றி வருகிறார்.

  பிஹேவிங்கால் அதிர்ச்சி

  பிஹேவிங்கால் அதிர்ச்சி

  இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சுச்சி. வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சுச்சி, திடீர் திடீரென ஒவர் எமோஷனல் ஆகிறார். அழுவது சிரிப்பது என மாறி மாறி அவரது பிஹேவிங் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  கிண்டல் மீம்ஸ்

  கிண்டல் மீம்ஸ்

  சக போட்டியாளரான பாலாஜி மீது அதீத அன்புக்காட்டி வருகிறார். திடீர் திடீரென மாறும் மனநிலையால் ஹவுஸ்மே ட்ஸாலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். இதற்காக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்காக பரிதாப்பட்டாலும் சிலர், அவரை கிண்டலடித்து மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

  கார்த்திக் பதில்

  கார்த்திக் பதில்

  இந்நிலையில் பிக்பாஸ் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கார்த்திக் பதிலளித்துள்ளார். அப்போது, பிக்பாஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள கார்த்திக், நம்மை நமக்கே காட்டும் பயங்கரமான பிரதிபலிப்பு என கூறியுள்ளார்.

  தவிர்க்கிறேன்..

  தவிர்க்கிறேன்..

  மற்றொரு ரசிகர் உங்களை சந்திப்பது ஈஸியா டஃபா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள கார்த்திக். பெரும்பாலும் கஷ்டம்தான். நான் மனிதர்களுடன் தொடர்பில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். எப்போது என்னால் தவிர்க்க முடியாதோ அப்போது ஃபிரண்ட்லியாக இருப்பது போல் நடிப்பேன் என ஃபிரான்க்காக கூறியுள்ளார்.

  எமோஷனல் பதில்

  எமோஷனல் பதில்

  மற்றொரு ரசிகர், இப்போ பிக்பாஸ் மீம்ஸ் பார்க்கும் போது ரொம்ப ஹேப்பியா இருக்கீங்களா என கேட்டார். அதற்கு ரொம்பவே எமோஷனலாக பதில் அளித்துள்ளார் கார்த்திக்.
  அதாவது எனது முன்னாள் மனைவிய நான் மிகவும் உயர்வாக நினைக்கிறேன்.

  உருக்கமான பதில்

  உருக்கமான பதில்

  அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறேன். உங்கள் யாருக்கும் அவரைப் பற்றி தெரியாது. இருந்தாலும் சிந்தித்து செயல்படுங்கள் என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு ரசிகர் உங்களின் அடுத்தப்படம் என்ன என்று கேட்டுள்ளார்.

  பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ் | Day 44 | மணிகூண்டு Task
  சூப்பர் சீனியர் ஹீரோஸ்

  சூப்பர் சீனியர் ஹீரோஸ்

  அதற்கு பதில் அளித்துள்ள கார்த்திக், தான் ஒரு படத்தை இயக்கி வருவதாகவும் அந்தப் படத்திற்கு சூப்பர் சீனியர் ஹீரோஸ் என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கார்த்திக் யாரடி நீ மோகினி உட்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Suchi's Ex husband Karthik Kumar's emotional reply about Suchi in Biggboss house. He says my ex wife is someone i thik highly of and am very fond of. None of you know her. Although you all think and you do.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X