நீங்கதான் ஸ்ட்ராங் கன்டெஸ்டன்ட்.. உங்க அழுகை யாரையும் இரிட்டேட் பண்ணல.. அனிதாவை ஏத்திவிட்ட சுச்சி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் அனிதாவிடம் பேசிய சுசித்ரா நீங்கள்தான் ஸ்ட்ராங்கான கன்டெஸ்ட்டன்ட் என அடித்துக் கூறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே அழுது கொண்டிருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது அனிதா சம்பத்தான்.

யாராவது ஏதாவது சொன்னாலும் அழுகை, நாமினேஷனில் வந்தாலும் அழுகை, டாஸ்க் என்றாலும் அழுகை, தோற்றாலும் அழுகை ஜெயித்தாலும் அழுகை என எல்லாவற்றுக்கும் கண்ணீர் சிந்தி வருகிறார்.

கதறி அழுத அனிதா

கதறி அழுத அனிதா

நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சுமங்கலி விவகாரம் குறித்து பேசினார். அந்த இடத்தில் அவர் பேசியது தவறு என்று ஹவுஸ்மேட்ஸ் கூறியதால் பாத் ரூம், கன்ஃபெஷன் ரூம் என சென்ற இடத்தில் எல்லாம் அழுதார்.

அழு மூஞ்சி அனிதா

அழு மூஞ்சி அனிதா

இதனால் சமூக வலைதளங்களில் அழுமூஞ்சி அனிதா என்றே ரசிகர்கள் அழைக்க தொடங்கிவிட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற நீங்கா நினைவுகள் டாஸ்க்கிலும் தன்னுடைய கணவர் குறித்து பேசி கண்ணீர் விட்டார்.

திறமையான போட்டியாளர்

திறமையான போட்டியாளர்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த சுசித்ரா, எல்லோருக்கும் ஈமோஜிகளை வழங்கி அர்ச்சனா ஸ்டைலில் பட்டம் கொடுத்தார். அப்போது அனிதாவுக்கு திறமையான போட்டியாளர் என பட்டம் கொடுத்தார்.

அழுவதால் ஸ்ட்ராங் ஆகிறீர்கள்

அழுவதால் ஸ்ட்ராங் ஆகிறீர்கள்

இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில், சுச்சியிடம் பேசிய அனிதா, தான் அழுவது டிராபேக் ஆகிறதா என்று கேட்டார். அதற்கு நீங்கள் அழுவதை பார்த்து ஹவுஸ்மேட்ஸ்தான் இரிட்டேட் ஆகிறார்கள். ஆனால் வெளியில் நீங்கள் ஸ்ட்ராங் ஆகிறீர்கள்.

ஸ்ட்ராங்கான போட்டியாளர்

ஸ்ட்ராங்கான போட்டியாளர்

நீங்கள் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்பதால்தான் எங்களை இறக்கப் பார்க்கிறார்கள். நீங்கள் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நல்ல மாதிரி பேசுங்கள், அவருக்கு ஹக் கொடுங்கள், அவருக்கு க்யூட்டாக ஏதாவது செய்யுங்கள் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X