அச்சச்சோ.. இது என்ன புது ஸ்டோரி.. சோம்க்கு சாம் மேல ஈர்ப்பா? பற்றவைத்து வேலையை ஆரம்பித்த சுச்சி!
சென்னை: சனத்திடம் சோம் சேகர் மற்றும் சம்யுக்தா குறித்து ஒரு சென்சிட்டிவான மேட்டரை கொளுத்திப் போட்டுள்ளார் சுச்சி.
பிக்பாஸ் வீடு சுச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு பிறகு சற்று ஆட்டம் கண்டுள்ளது.
வெளியே நடப்பது பாதி நடக்காதது பாதி என கொளுத்தி போட்டு ஹவுஸ்மெட்டுகளை சூடேற்றியுள்ளார் சுச்சி.

டைனிங் டேபிள் பேச்சு
குறிப்பாக பாலாதான் பர்ஃபெக்ட் பிளேயர் நம்பி பல்வேறு பிரச்சனைகளில் அவருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் சுச்சியும் சனமும் டைனிங் டேபிளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஷிவானியிடம் பாலாவும்..
அப்போது பாலாவிடம் சொல்லி ஷிவானியை சாப்பிட வரசொல்ல வேண்டும் என்றும் கூறினார் சுச்சி. அதற்கு அவங்க சாப்ட்டாச்சு என்றார் சனம். யாரு ஷிவானி சாப்ட்டாச்சா என சுச்சி கேட்க, இல்லை பாலா சாப்டாச்சு என்றார்.

ரெக்கமண்டேஷனில்..
அதற்கு சுச்சி, ஷிவானி இன்னும் சாப்பிடவில்லை. பாலாவிடம் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு சனம், ஆமாம் ஆமாம் இப்போ எல்லாமே இப்படி ரெக்கமண்டேஷனில் செல்கிறது என்று நக்கலாய் சொல்லி சிரித்தார்.

கோச்சிக்கிட்டு இருக்காங்க
அதற்கு சுச்சி 99% நேரம் இருவரும் ஒன்னாகத்தான் இருக்கிறார்கள். இதுல எப்போ பார்த்தாலும் கோச்சிக்கிட்டு இருக்காங்க. கேட்டா மறுக்குறாங்க ஓத்துக்க மாட்றாங்க என்றார் சுச்சி.

சோம்க்கு சம்யுக்தா மீது
தொடர்ந்து பேசிய சுச்சி, சோம்க்கு சம்யுக்தாவை பிடிச்சுருக்கு என்றார். அதற்கு சனம் அப்படியா எனக்கு தெரியாதே என கூற, இது தெரியாதா உங்களுக்கு இதுதான் இப்போ பேச்சே.. எல்லாருக்கும் தெரியும் என்ற சுச்சி. நான் சோம்கிட்டேயே கேட்டுவிட்டேன். நீங்கள் வேண்டுமானால் கேளுங்கள் என்றார்.

சோம் மீது சாமுக்கு ஈர்ப்பு
அதற்கு சனம் நான் அப்படியெல்லாம் பர்சனல் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்றார. இந்த வீடே தனிப்பட்ட இடம்தான் என்றார் சுச்சி, நான் கேட்டதால்தான் எனக்கு பதில் கிடைத்தது என்றார். என்ன பதில் என்று சனம் கேட்க சோம்க்கு சம்யுக்தா மீது ஈர்ப்பு இருக்கு என்றார்.

சம்யுக்தாவுடன் சேர்த்து..
ஏற்கனவே பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையே காதல் இருப்பதாக வெளியில் பேசப்படுவதாகவும் கூறினார் சுச்சி. அதனை சம்பந்தப்பட்டவர்களிடமே கூற, அப்போது முதல் பாலாஜியும் ஷிவானியும் ரொம்பவே நெருக்கமாகி விட்டனர். இப்போது ஏற்கனவே திருமணமான சம்யுக்தாவை சோமுடன் கோர்த்துவிட்டுள்ளார் சுச்சி.

இங்கேயும் ஆரம்பிச்சுட்டீங்களா
சுச்சி சனமிடம் பேசியதை பார்த்த ரசிகர்கள், உங்களின் சுச்சி லீக்ஸ் வேலையை இங்கேயும் ஆரம்பித்துவிட்டீற்களா? இன்னும் யாரையெல்லாம் சேர்த்து வைத்து பேசப் போகிறீர்கள்? என கேட்டு வருகின்றனர். சோம்க்கும் ரம்யாவுக்கும் தான் சாஃப்ட் கார்னர் இருப்பதாக பேசப்படும் நிலையில் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை வைத்து இப்படி கொளுத்தி போட்டுள்ளார் சுச்சி.


Click it and Unblock the Notifications











